Bible Versions
Bible Books

Isaiah 61:6 (NCV) New Century Version

Versions

TOV   நீங்களோ கர்த்தரின் ஆசாரியரென்று சொல்லப்படுவீர்கள்; உங்களை நமது தேவனுடைய பணிவிடைக்காரரென்பார்கள்; நீங்கள் ஜாதிகளின் செல்வத்தை அநுபவித்து, அவர்கள் மகிமையைக் கொண்டு மேன்மைபாராட்டுவீர்கள்.
IRVTA   நீங்களோ யெகோவாவின் ஆசாரியரென்று சொல்லப்படுவீர்கள்; உங்களை நமது தேவனுடைய ஊழியக்காரர் என்பார்கள்; நீங்கள் தேசங்களின் செல்வத்தை அநுபவித்து, அவர்கள் மகிமையைக் கொண்டு மேன்மைபாராட்டுவீர்கள்.
ERVTA   ‘கர்த்தருடையஆசாரியர்கள்’ என்றும், ‘நமது தேவனுடைய ஊழியர்கள்" என்றும் நீங்கள் அழைக்கப்படுவீர்கள். பூமியின் அனைத்து நாடுகளிலுமுள்ள செல்வங்களும் உனக்கு வரும். நீ இவற்றைப் பெற்றதைப்பற்றி பெருமை அடைவாய்.
RCTA   நீங்களோ ஆண்டவருடைய அர்ச்சகர்கள் எனப்படுவீர்கள், நம் கடவுளின் திருப்பணியாளர்கள் எனப் பெயர் பெறுவீர்கள். புறவினத்தாரின் செல்வங்களைக் கொண்டு நீங்கள் சாப்பிடுவீர்கள், அவர்களுடைய மகிமையை உரிமையாக்கிக் கொள்வீர்கள்.
ECTA   நீங்களோ, ஆண்டவரின் குருக்கள் என்று அழைக்கப்படுவீர்கள்; நம் கடவுளின் திருப்பணியாளர் என்று பெயர் பெறுவீர்கள்; பிறஇனத்தாரின் செல்வத்தைக் கொண்டு நீங்கள் உண்பீர்கள்; அவர்களின் சொத்தில் நீங்கள் பெருமை பாராட்டுவீர்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us