Versions
TOV அப்பொழுது யோசுவா ஜனங்களை நோக்கி: கர்த்தரைச் சேவிக்கும்படி நீங்கள் அவரைத் தெரிந்துகொண்டதற்கு நீங்களே உங்களுக்குச் சாட்சிகள் என்றான். அதற்கு அவர்கள்: நாங்களே சாட்சிகள் என்றார்கள்.
IRVTA அப்பொழுது யோசுவா மக்களை நோக்கி: யெகோவாவைத் தொழுதுகொள்ளும்படி நீங்கள் அவரைத் தெரிந்துகொண்டதற்கு நீங்களே உங்களுக்குச் சாட்சிகள் என்றான். அதற்கு அவர்கள்: நாங்களே சாட்சிகள் என்றார்கள்.
ERVTA அப்போது யோசுவா, "உங்களையும், உங்களோடிருக்கிற ஜனங்களையும் சுற்றி நோக்குங்கள். நீங்கள் கர்த்தருக்கு சேவை செய்ய முடிவெடுத்திருக்கிறீர்கள் என்பதை அறிவீர்களா? இதற்கு நீங்கள் எல்லோரும் சாட்சிகளா?" என்றான். ஜனங்கள் பதிலாக, "ஆம், அது உண்மை! நாங்கள் கர்த்தருக்கு சேவை செய்ய முடிவெடுத்துள்ளோம் என்பதைக் காண்கிறோம்" என்றார்கள்.
RCTA அவரைத் தொழும்படி நீங்கள் அவரை உங்கள் ஆண்டவராகத் தேர்ந்துகொண்டதற்கு நீஙகள் சாட்சி" என்றார். அதற்கு மக்கள், "ஆம், நாங்கள் சாட்சி" என்று சொன்னார்கள்.
ECTA யோசுவா மக்களிடம், "ஆண்டவருக்கு ஊழியம் செய்ய அவரை நீங்களே தெரிந்து கொண்டீர்கள் என்பதற்கு நீங்களே சாட்சிகள்" என்றார். அவர்கள், "நாங்களே சாட்சிகள்" என்றனர்.