Bible Versions
Bible Books

Leviticus 12:7 (NCV) New Century Version

Versions

TOV   அதை அவன் கர்த்தருடைய சந்நிதியில் பலியிட்டு, அவளுக்காகப் பாவநிவிர்த்தி செய்வானாக; அப்பொழுது அவள் தன் உதிர ஊறலின் தீட்டு நீங்கிச்சுத்தமாவாள். இது ஆண்பிள்ளையையாவது பெண்பிள்ளையையாவது பெற்றவளைக்குறித்த பிரமாணம்.
IRVTA   அதை அவன் யெகோவாவுடைய சந்நிதியில் பலியிட்டு, அவளுக்காகப் பாவநிவிர்த்தி செய்வானாக; அப்பொழுது அவள் தன் இரத்தப்போக்கின் தீட்டு நீங்கிச் சுத்தமாவாள். இது ஆண்குழந்தையையாவது பெண்குழந்தையையாவது பெற்றவளைக்குறித்த விதிமுறைகள்.
ERVTA   (7-8) ஒரு பெண்ணுக்கு ஆட்டுக் குட்டியைக் கொடுக்க முடியாவிட்டால் அவள் இரண்டு புறாக்களையாவது அல்லது இரண்டு புறாக் குஞ்சுகளையாவது கொண்டு வரலாம். இவற்றில் ஒரு புறா தகன பலிக்காகவும் இன்னொரு புறா பாவப்பரிகார பலிக்காகவும் பயன்படும். ஆசாரியன் இவற்றை கர்த்தரின் சந்நிதானத்தில் பலியிட வேண்டும். இதன் மூலம் ஆசாரியன் அவளுக்காக பாவ நிவாரணம் செய்ய வேண்டும். அவள் அப்படியே சுத்தமாவாள். இவையே ஆண் அல்லது பெண் குழந்தைப் பெற்ற ஒரு புதிய தாய்க்குரிய விதிகள் ஆகும்” என்று கூறினார்.
RCTA   அவர் அவற்றை ஆண்டவர் திருமுன் ஒப்புக்கொடுத்து அவளுக்காக மன்றாட, அவள் தன் இரத்தப்பெருக்கின் தீட்டு நீங்கிச் சுத்தமடைவாள். ஆண் பிள்ளையை அல்லது பெண் பிள்ளையைப் பெற்றவளைக் குறித்த சட்டம் இதுவே.
ECTA   அதனை அவர் ஆண்டவர் திருமுன் கொண்டுவந்து அவளுக்குக் கறைநீக்கம் செய்வார். அவள் தன் உதிர ஊறல் தீட்டிலிருந்து தூய்மையாவாள். இது ஆண் அல்லது பெண் குழந்தைபெற்றவருக்கு விதிக்கப்படும் சட்டம்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us