Bible Versions
Bible Books

Leviticus 16:2 (NCV) New Century Version

Versions

TOV   கிருபாசனத்தின்மேல் ஒரு மேகத்தில் நான் காணப்படுவேன்; ஆதலால் உன் சகோதரனாகிய ஆரோன் சாகாதபடி, பரிசுத்த ஸ்தலத்திலே திரைக்கு உட்புறத்திலிருக்கிற பெட்டியின்மேலுள்ள கிருபாசன மூடிக்கு முன்பாகச் சகல வேளையிலும் வரவேண்டாம் என்று அவனுக்குச் சொல்.
IRVTA   “கிருபாசனத்தின்மேல் ஒரு மேகத்தில் நான் காணப்படுவேன்; ஆதலால் உன் சகோதரனாகிய ஆரோன் மரணமடையாமலிருக்க, பரிசுத்த ஸ்தலத்திலே திரைக்கு உட்புறத்திலிருக்கிற பெட்டியின்மேலுள்ள கிருபாசன மூடிக்கு முன்பாக எல்லா நேரங்களிலும் வரவேண்டாம் என்று அவனுக்குச் சொல்.
ERVTA   "உன் சகோதரன் ஆரோனிடம் பின்வருவதைக் கூறு: கூடாரத்தின் திரைக்குப் பின்னால் அவன் விரும்புகிற போதெல்லாம் மகாபரிசுத்த இடத்திற்கு போகவேண்டாம். திரைக்குப் பின்னால் அந்த அறையில் பரிசுத்தப் பெட்டி உள்ளது. அதன்மேல் கிருபாசன மூடி உள்ளது. நான் அதற்கு மேல் மேகத்தில் காட்சி தருவேன். ஆரோன் அங்கே சென்றால் மரித்து போகலாம்!
RCTA   உன் சகோதரனான ஆரோன் சாகாத படிக்குத் திருவிடத்திலே அதாவது: பெட்டகத்தை மூடுகின்ற இரக்கத்தின் அரியணைக்கு முன் இருக்கிற திரைக்கு உட்புறத்திலே எல்லா வேளையிலும் வர வேண்டாமென்று அவனுக்குச் சொல். (உண்மையிலே இரக்கத்தின் அரியணைக்கு மேல் ஒரு மேகத்தில் நாம் காணப்படுவோம். )
ECTA   "ஆரோனிடம் நீ கூற வேண்டியது; அவன் சாகாது இருக்க வேண்டுமெனில், தூயகத்தில் தொங்குதிரைக்கு உள்ளே இருக்கும் இரக்கத்தின் இருக்கையின் மூடிக்கு முன்பாக, அவன் விரும்பும் போதெல்லாம் வரக்கூடாது; வந்தால் சாவுக்குள்ளாவான். ஏனெனில் இரக்கத்தின் இருக்கையின்மேல் மேகத்தில் நான் தோன்றுவேன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us