Bible Versions
Bible Books

Numbers 18:23 (NCV) New Century Version

Versions

TOV   லேவியர் மாத்திரம் ஆசரிப்புக் கூடாரத்துக்கடுத்த வேலைகளைச் செய்யவேண்டும்; அவர்கள் தங்கள் அக்கிரமத்தைச் சுமப்பார்கள்; இஸ்ரவேல் புத்திரர் நடுவே அவர்களுக்குச் சுதந்தரம் இல்லை என்பது உங்கள் தலைமுறைதோறும் நித்திய கட்டளையாயிருக்கும்.
IRVTA   லேவியர்கள் மட்டும் ஆசரிப்புக் கூடாரத்தைச்சேர்ந்த வேலைகளைச் செய்யவேண்டும்; அவர்கள் தங்களுடைய அக்கிரமத்தைச் சுமப்பார்கள்; இஸ்ரவேல் மக்கள் நடுவே அவர்களுக்குச் சுதந்தரம் இல்லை என்பது உங்களுடைய தலைமுறைதோறும் நிரந்தர கட்டளையாக இருக்கும்.
ERVTA   ஆசரிப்புக் கூடாரத்திற்குள் பணியாற்றும் லேவியர்கள் இதற்கு எதிரான பாவங்களுக்குப் பொறுப்பாவார்கள். இந்த சட்டம் எல்லாக் காலத்திற்குரியதாகும். நான் மற்ற இஸ்ரவேல் ஜனங்களுக்கு வாக்களித்த நிலமானது லேவியர்களுக்கும் கிடைக்காது.
RCTA   ஆலயத்தில் நமக்குப் பணிவிடை செய்து மக்களின் பாவங்களைச் சுமந்து கொள்ளும் லேவியின் புதல்வர்களுக்கு மட்டுமே அவை சொந்தம். இது உங்கள் தலைமுறைதோறும் நித்திய சட்டமாய் இருக்கும். அவர்களுக்கு வேறு சொத்து இராது.
ECTA   ஆனால் லேவியர் சந்திப்புக்கூடாரத்தில் பணி செய்வர்; அவர்கள் குற்றம் அவர்கள் மேலேயே இருக்கும்; உங்கள் தலைமுறைதோறும் இது என்றுமுள நியமமாக விளங்கும்; இஸ்ரயேல் மக்களிடையே அவர்களுக்கு உரிமைச் சொத்தாக ஏதுமில்லை.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us