Bible Versions
Bible Books

Numbers 27:3 (NCV) New Century Version

Versions

TOV   எங்கள் தகப்பன் வனாந்தரத்தில் மரணமடைந்தார்; அவர் கர்த்தருக்கு விரோதமாகக் கூடின கோராகின் கூட்டத்தாரில் சேர்ந்தவர் அல்ல, தம்முடைய பாவத்தினாலே மரித்தார்; அவருக்குக் குமாரர் இல்லை.
IRVTA   “எங்களுடைய தகப்பன் வனாந்திரத்தில் மரணமடைந்தார்; அவர் யெகோவாவுக்கு விரோதமாகக் கூடின கோராகின் கூட்டத்தாரில் சேர்ந்தவர் அல்ல, தம்முடைய பாவத்தினாலே இறந்தார்; அவருக்கு மகன்கள் இல்லை.
ERVTA   "நாங்கள் பாலை வனத்தின் வழியாகப் பயணம் செய்தபோது எங்கள் தந்தை மரித்துப்போனார். அவரது மரணம் ஒரு இயற்கை மரணம். அவர் கோராவின் குழுவைச் சேர்ந்தவரல்ல. (கோரா கர்த்தருக்கு எதிராக மாறியவன்.) ஆனால் எங்கள் தந்தைக்கு ஆண் பிள்ளைகள் இல்லை.
RCTA   எங்கள் தந்தையார் பாலைவனத்தில் இறந்து போனார். கொறே என்பவனால் ஆண்டவருக்கு விரோதமாய்ச் செய்யப்பட்ட கலகத்தில் அவர் சேர்ந்தவரல்லர். ஆனால் தமது சொந்தப் பாவத்தோடு இறந்தார். அவருக்குப் புதல்வர் இல்லை. அவருக்கு ஆண்மக்கள் இல்லாததினாலே அவருடைய பெயர் அவருடைய வம்சத்தில் இல்லாமல் அற்றுப் போகலாமா? எங்கள் குடும்பத்தாருக்குள்ளே எங்களுக்கு மரபுரிமை கொடுக்க வேண்டும் என்று விண்ணப்பம் செய்தார்கள்.
ECTA   எங்கள் தந்தை பாலை நிலத்தில் இறந்து போனார். கோராகைச் சார்ந்தவர்கள் ஆண்டவருக்கு எதிராகக் கூடிய கூட்டத்தினுள் அவர் இல்லை. அவர்தம் பாவத்துக்காகவே இறந்தார். அவருக்குப் புதல்வர்கள் இல்லை.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us