Versions
TOV அதிரமித்தியம் ஊர்க்கப்பலில் நாங்கள் ஏறி, ஆசியா நாட்டுக் கரைபிடித்தோடவேண்டுமென்று நினைத்துப் புறப்பட்டோம். மக்கெதோனியா தேசத்துத் தெசலோனிக்கே பட்டணத்தானாகிய அரிஸ்தர்க்கு எங்களுடனேகூட இருந்தான்.
IRVTA அதிரமித்தியம் ஊர்க்கப்பலில் நாங்கள் ஏறி, ஆசியா நாட்டு வழியைபிடித்துப் போகவேண்டுமென்று நினைத்துப் புறப்பட்டோம். மக்கெதோனியா தேசத்துத் தெசலோனிக்கே பட்டணத்தானாகிய அரிஸ்தர்க்கு எங்களுடனேகூட இருந்தான்.
ERVTA நாங்கள் ஒரு கப்பலில் ஏறிச் சென்றோம். கப்பல் அதிரமித்தியம் என்னும் நகரிலிருந்து வந்து ஆசியாவின் பல இடங்களுக்குப் பயணம் செல்லத் தயாராக இருந்தது. அரிஸ்தர்க்கும் எங்களோடு வந்தான். அம்மனிதன் மக்கதோனியாவில் தெசலோனிக்கா நகரத்தைச் சேர்ந்தவன்.
RCTA அதிராமித்தியம் ஊர்க்கப்பல் ஒன்று ஆசியா நாட்டுத் துறைமுகங்களுக்குச் செல்லத் தயாராயிருந்தது. நாங்கள் அதிலேறிப் பயணமானோம். தெசலோனிக்கே ஊரானாகிய அரிஸ்தர்க்கு என்னும் மக்கதோனியா நாட்டவன் எங்களோடிருந்தான்.
ECTA நாங்கள் அதிராமித்தியக் கப்பலொன்றில் ஏறினோம். அது ஆசிய மாநிலத்துத் துறைமுகங்களுக்குச் செல்லவிருந்தது. எங்களுடன் தெசலோனிக்காவைச் சேர்ந்த அரிஸ்தர்க்கு என்னும் மாசிதோனியரும் இருந்தார்.