Versions
TOV நாங்கள் உமக்குத் தேவையான மரங்களையெல்லாம் லீபனோனிலே வெட்டி, அவைகளைத் தெப்பங்களாய்க் கட்டி கடல் வழியாய் யோப்பாமட்டும் கொண்டுவருவோம்; பிற்பாடு நீர் அவைகளை எருசலேமுக்குக் கொண்டுபோகலாம் என்று எழுதி அனுப்பினான்.
IRVTA நாங்கள் உமக்குத் தேவையான மரங்களையெல்லாம் லீபனோனிலே வெட்டி, அவைகளைத் தெப்பங்களாகக் கட்டி கடல் வழியாக யோப்பாவரைக்கும் கொண்டுவருவோம்; பின்பு நீர் அவைகளை எருசலேமுக்குக் கொண்டுபோகலாம் என்று எழுதி அனுப்பினான்.
ERVTA நாங்கள் லீபனோன் நாட்டிலிருந்து மரங்களை வெட்டுவோம். நாங்கள் தேவையான அளவிற்கு மரங்களை வெட்டுவோம். நாங்கள் மரப் பலகைகளைக் கட்டி தெப்பங்களைப் போன்று கடல் வழியாக யோப்பாவரை கொண்டுவருவோம். பிறகு நீங்கள் எருசலேமிற்கு அவற்றை எடுத்துச் செல்லலாம்" என்றான்.
RCTA நாங்கள் தங்களுக்குத் தேவையான மரங்களையெல்லாம் லீபானில் வெட்டி அவற்றைத் தெப்பங்களாகக் கட்டி, கடல் வழியாய் யோப்பா வரை கொண்டு வருவோம். அங்கிருந்து அவற்றை யெருசலேமுக்கு கொண்டு போகிறதோ தங்களின் பொறுப்பாகும்" என்று அதில் எழுதியிருந்தது.
ECTA நாங்கள் உமக்குத் தேவையான மரங்களையெல்லாம் லெபனோவில் வெட்டி, அவற்றைத் தெப்பங்களாகக் கட்டி, கடல் வழியாக யாப்பாவரை கொண்டு வருவோம். அங்கிருந்து அவற்றை எருசலேமுக்கு நீர் கொண்டு செல்லலாம்."