Versions
TOV பிற்பாடு அம்னோன் அவளை மிகவும் வெறுத்தான்; அவன் அவளை விரும்பின விருப்பத்தைப் பார்க்கிலும், அவளை வெறுத்த வெறுப்பு அதிகமாயிருந்தது. ஆகையால்: நீ எழுந்து போய்விடு என்று அம்னோன் அவளோடே சொன்னான்.
IRVTA அதன்பின்பு அம்னோன் அவளை மிகவும் வெறுத்தான்; அவன் அவளை விரும்பின விருப்பத்தைவிட, அவளை வெறுத்த வெறுப்பு அதிகமாக இருந்தது. ஆகையால்: நீ எழுந்து போய்விடு என்று அம்னோன் அவளோடு சொன்னான்.
ERVTA பின்பு அம்னோன் தாமாரை வெறுக்க ஆரம்பித்தான். அவளை முன்பு விரும்பினதற்கு அதிகமாக அவளை வெறுக்க ஆரம்பித்தான். அம்னோன் தாமாரை நோக்கி, "எழுந்து இங்கிருந்து போ!" என்றான்.
RCTA அதன் பின் அம்னோன் அவளை மிகவும் வெறுக்கத் தொடங்கினான். முன்பு அவளை எவ்வளவு விரும்பியிருந்தானோ, அதற்கும் அதிகமாக இப்போது அவளை வெறுத்தான். அவளை பார்த்து, "நீ எழுந்து போ" என்றான்.
ECTA அதன் பிறகு அம்னோன் அவளை மிகவும் அதிகமாக வெறுத்தான். அவன் எந்த அளவுக்கு அவள் மீது மோகம் கொண்டிருந்தானோ அந்த அளவுக்கு மிகுதியாக அவளை வெறுத்து, "எழுந்து சென்று விடு" என்று அவளிடம் கூறினான்.