Versions
TOV அப்பொழுது நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேல் மிஸ்பாவிலிருந்து புறப்பட்டு, அவர்களுக்கு எதிராக அழுதுகொண்டே நடந்துவந்து, அவர்களைச் சந்தித்தபோது, அவர்களை நோக்கி: அகிக்காமின் குமாரனாகிய கெதலியாவினிடத்தில் வாருங்கள் என்றான்.
IRVTA அப்பொழுது நெத்தானியாவின் மகனாகிய இஸ்மவேல் மிஸ்பாவிலிருந்து புறப்பட்டு, அவர்களுக்கு எதிராக அழுதுகொண்டே நடந்துவந்து, அவர்களைச் சந்தித்தபோது, அவர்களை நோக்கி: அகீக்காமின் மகனாகிய கெதலியாவினிடத்தில் வாருங்கள் என்றான்.
ERVTA இஸ்மவேல் மிஸ்பாவை விட்டு அந்த 80 பேரையும் சந்திக்கப் போனான். அவர்களைச் சந்திக்க நடந்துப் போகும்போது அவன் அழுதான். இஸ்மவேல் அந்த 80 பேரையும் சந்தித்து அவர்களிடம், "என்னோடு வந்து அகிக்காமின் மகனான கெதலியாவைச் சந்தியுங்கள்" என்றான்.
RCTA நத்தானியாஸ் மகன் இஸ்மாயேல் மஸ்பாத்தினின்று புறப்பட்டு அழுது கொண்டு அவர்களை எதிர் கொண்டு சென்றான்; அவர்கள் அருகில் சென்றவுடன், "அயிக்காம் மகன் கொதோலியாசை வந்து பாருங்கள்" என்றான்.
ECTA அவர்களைச் சந்திக்க நெத்தனியாவின் மகன் இஸ்மயேல் மிஸ்பாவினின்று புறப்பட்டு அழுது கொண்டே சென்றான். அவர்களைச் சந்தித்தபோது, "அகிக்காமின் மகன் கெதலியாவை வந்து பாருங்கள்" என்று அவர்களிடம் கூறினான்.