Versions
TOV நீங்கள் உங்கள் பிதாவின் கிரியைகளைச் செய்கிறீர்கள் என்றார். அதற்கு அவர்கள்: நாங்கள் வேசித்தனத்தினால் பிறந்தவர்களல்ல; ஒரே பிதா எங்களுக்குண்டு, அவர் தேவன் என்றார்கள்.
IRVTA நீங்கள் உங்களுடைய பிதாவின் செயல்களைச் செய்கிறீர்கள் என்றார். அதற்கு அவர்கள்: நாங்கள் வேசித்தனத்தினால் பிறந்தவர்கள் இல்லை; ஒரே பிதா எங்களுக்கு இருக்கிறார், அவர் தேவன் என்றார்கள். PS
ERVTA ஆகையால் நீங்கள் உங்கள் சொந்தப் பிதா செய்ததையே செய்கிறீர்கள் என்றார். ஆனால் யூதர்கள், எங்கள் பிதா யாரென்று தெரிந்து கொள்ள இயலாத குழந்தைகள் அல்ல நாங்கள். தேவனே எங்கள் பிதா. எங்களுக்குரிய ஒரே பிதாவும் அவரே என்றனர்.
RCTA நீங்கள் செய்துவருவதோ உங்கள் தந்தையின் செயல்கள்தாம்." அவர்கள், "நாங்கள் வேசித்தனத்தில் பிறந்தவர்கள் அல்ல. எங்களுக்கு ஒரே தந்தை உண்டு: கடவுளே அவர்" என்றனர்.
ECTA நீங்கள் உங்கள் தந்தையைப் போலச் செயல்படுகிறீர்கள்" என்றார். அவர்கள், "நாங்கள் பரத்தைமையால் பிறந்தவர்கள் அல்ல; எங்களுக்கு ஒரே தந்தை உண்டு; கடவுளே அவர்" என்றார்கள்.