Versions
TOV இந்த ஆறு குமாரர் அவனுக்கு எப்ரோனிலே பிறந்தார்கள்; அங்கே ஏழு வருஷமும் ஆறு மாதமும் அரசாண்டான்; எருசலேமிலோ முப்பத்துமூன்று வருஷம் அரசாண்டான்.
IRVTA இந்த ஆறு மகன்கள் அவனுக்கு எப்ரோனில் பிறந்தார்கள்; அங்கே ஏழு வருடங்களும் ஆறு மாதங்களும் ஆட்சிசெய்தான்; எருசலேமில் முப்பத்துமூன்று வருடங்கள் ஆட்சிசெய்தான்.
ERVTA இந்த ஆறு மகன்களும் எப்ரோனில் தாவீதிற்குப் பிறந்தவர்கள். தாவீது, எப்ரோனில் ஏழு ஆண்டுகளும் ஆறு மாதங்களும் ஆண்டான். தாவீது எருசலேமில் 33 ஆண்டுகள் அரசாண்டான்.
RCTA இந்த ஆறு புதல்வரும் அவர் எபிரோனில் இருந்த போது பிறந்தனர். அவர் அங்கே ஏழு ஆண்டுகளும் ஆறு மாதமும் ஆட்சி புரிந்தார். யெருசலேமிலோ முப்பத்திமூன்று ஆண்டுகள் அரசோச்சினார்.
ECTA இந்த ஆறு பேரும் எபிரோனில் அவருக்குப் பிறந்தவர்கள். அங்கே அவர் ஏழு ஆண்டுகளும் ஆறு மாதங்களும் ஆட்சி செலுத்தினார். எருசலேமிலோ முப்பத்து மூன்று ஆண்டுகள் ஆட்சி செலுத்தினார்.