Versions
TOV அவன் நீரூற்றண்டைக்குப் போய், உப்பை அதிலே போட்டு: இந்தத் தண்ணீரை ஆரோக்கியமாக்கினேன்; இனி இதினால் சாவும் வராது, நிலப்பாழும் இராது என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
IRVTA அவன் நீரூற்றிற்குப் போய், உப்பை அதிலே போட்டு: இந்தத் தண்ணீரை சுத்திகரித்தேன்; இனி இதனால் சாவும் வராது, பாழ்நிலமாகவும் இருக்காது என்று யெகோவா சொல்லுகிறார் என்றான்.
ERVTA அவன் தண்ணீர் பாய்கிற இடத்திற்கு போனான். அதில் உப்பைப் போட்டான். "அவன், ‘நான் இந்த தண்ணீரை சுத்தமாக்குகிறேன்! இப்பொழுதிலிருந்து இந்த தண்ணீர் எவ்வித மரணத்துக்கும் காரணமாக இருக்காது. விளை நிலங்களில் தொடர்ந்து நல்ல விளைச்சலைத் தரும்’ என்று கர்த்தர் சொல்கிறார்" என்றான்.
RCTA அவர்கள் அதைக் கொண்டு வர, எலிசேயு நீரூற்றின் அருகே சென்று, நீரில் உப்பைக் கொட்டி, "இதோ, ஆண்டவர் திருவுளம் பற்றுகிறதாவது: 'இத்தண்ணீரை நாம் சுத்தப்படுத்தியுள்ளோம். இனி மேல் இதைப் பயன்படுத்தினால் சாவும் இராது; நிலமும் பலன் தரும்" என்றார்.
ECTA அவர்கள் அவ்வாறே கொண்டுவர, எலிசா நீருற்றின் அருகே சென்று, நீரில் உப்பைக் கொட்டி, "இதோ! ஆண்டவர் கூறுகிறார்; இத் தண்ணீரை நான் நல்லதாக மாற்றியுள்ளேன். இனி மேல் சாவும் இராது; நிலமும் பயன் தரும்" என்றார்.