Versions
TOV அப்படியே ராஜா தன்னோடிருக்கிற சேனாபதியாகிய யோவாபைப் பார்த்து: ஜனங்களின் இலக்கத்தை நான் அறியும்படிக்கு நீ தாண்முதல் பெயெர்செபா மட்டுமுள்ள இஸ்ரவேலரின் கோத்திரமெங்கும் சுற்றித்திரிந்து ஜனங்களைத் தொகையிடுங்கள் என்றான்.
IRVTA அப்படியே ராஜா தன்னோடு இருக்கிற தளபதியான யோவாபைப் பார்த்து: மக்களின் எண்ணிக்கையை நான் அறியும்படி நீ தாண்முதல் பெயெர்செபா வரையுள்ள இஸ்ரவேலர்களின் கோத்திரங்கள் எங்கும் சுற்றித்திரிந்து மக்களைக் கணக்கெடுங்கள் என்றான்.
ERVTA தாவீது அரசன் படைத் தலைவனாகிய யோவாபை நோக்கி, "தாணிலிருந்து பெயெர் செபா வரைக்கும் எல்லா இஸ்ரவேல் கோத்திரங்களிடமும் நீ போய் ஜனங்களின் எண்ணிக்கையைக் கணக்கிடு. அப்போது நான் மொத்த ஜனங்கள் தொகையைப் பற்றித் தெரிந்துக்கொள்ள முடியும்" என்றான்.
RCTA அப்படியே அரசர் படைத்தலைவனான யோவாபை நோக்கி, "நான் மக்களின் எண்ணிக்கையை அறியும்படி நீ தான் முதல் பெர்சபே வரை உள்ள இஸ்ராயேலின் கோத்திரங்கள் முழுவதும் சென்று மக்களைக் கணக்கிடு" என்றார்.
ECTA அரசர் யோவாபையும் அவரோடிருந்த படைத்தலைவர்களையும் அழித்து, "மக்கள் தொகை என்னவென்று நான் அறிய வேண்டும். நீங்கள் தாண் முதல் பெயேர்செபா வரை அனைத்து இஸ்ரயேல் குலங்களிடையே சென்று வீரர்கள் தொகையை கணக்கிடுங்கள்" என்றார்.