Versions
TOV இது எருசலேமிலுள்ள குடிகள் யாவருக்கும் தெரிந்திருக்கிறது; அதினாலே அந்த நிலம் அவர்களுடைய பாஷையிலே இரத்தநிலம் என்று அர்த்தங்கொள்ளும் அக்கெல்தமா என்னப்பட்டிருக்கிறது.
IRVTA இது எருசலேமிலுள்ள குடிகள் அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. அதினாலே அந்த நிலம் அவர்களுடைய மொழியிலே இரத்தநிலம் என்று அர்த்தங்கொள்ளும் அக்கெல்தமா என அழைக்கப்பட்டிருக்கிறது.
ERVTA எருசலேமின் மக்கள் அனைவரும் இதை அறிந்தனர். எனவேதான் அந்நிலத்திற்கு ԅஅக்கெல்தமா என்று பெயரிட்டனர். அவர்கள் மொழியில் அக்கெல்தமா என்பது இரத்த நிலம் எனப் பொருள்படும்.)
RCTA இது யெருசலேமில் குடியிருப்பவர் அனைவருக்கும் தெரிந்ததே. அதனால் அந்த நிலம் அவர்கள் மொழியில் அக்கெல்டாமா, அதாவது இரத்த நிலம், எனப்படுகிறது.
ECTA இது எருசலேமில் குடியிருக்கும் அனைவருக்கும் தெரியவந்தது. அதனால் அந்த நிலத்தை அவர்கள் தம் மொழியில் "அக்கலிதமா" என வழங்குகின்றார்கள். அதற்கு "இரத்தநிலம்" என்பது பொருள்.