Versions
TOV பரிசுத்த ஸ்தலத்துக்குப் போக்குவரவு செய்த துன்மார்க்கர் அடக்கம்பண்ணப்பட்டதைக் கண்டேன்; அவர்கள் அப்படிச் செய்துவந்த பட்டணத்திலேயே மறக்கப்பட்டுப்போனார்கள்; இதுவும் மாயையே.
IRVTA பரிசுத்த இடத்திற்குப் போக்குவரவு செய்த துன்மார்க்கர்கள் அடக்கம்செய்யப்பட்டதைக் கண்டேன்; அவர்கள் அப்படிச் செய்துவந்த பட்டணத்திலேயே * மறக்கப்பட்டுப்போனார்கள் புகழப்பட்டார்கள்; இதுவும் மாயையே.
ERVTA தீய ஜனங்களுக்கு அழகான சிறந்த சவ அடக்கங்கள் நடைபெறுவதை நான் பார்த்தேன். அடக்கச் சடங்கு முடிந்து ஜனங்கள் வீட்டிற்குப் போனதும் மரித்துப் போன தீயவர்களைப்பற்றி நல்லவற்றைக் கூறினார்கள். இத்தகைய காரியங்கள் தீயவன் வாழ்ந்த அதே நகரத்திலேயே நடந்து வருகின்றன. இது அர்த்தமற்றது.
RCTA அடக்கம் செய்யப்பட்ட அக்கிரமிகளையும் கண்டேன். அவர்கள் உயிரோடிருக்கையில் பரிசுத்த இடத்தில் அலுவலாயிருந்தார்கள். நீதி ஒழுக்கம் உடையவர்களைப்போல் நகரத்தில் புகழப்பட்டார்கள். ஆனால், இதுவும் வீணே.
ECTA பொல்லார் மாண்டபின் அடக்கம் செய்யப்படுகின்றனர். அடக்கம் செய்தவர்கள் கல்லறைத் தோட்டத்திலிருந்து வீடு திரும்பி அந்தப் பொல்லார் தீச்செயல் புரிந்த ஊரிலேயே அவர்களைப் பாராட்டிப் பேசுகிறார்கள். எல்லாம் வீணான செயலே.