Bible Versions
Bible Books

Ezekiel 32:24 (YLT) Young's Literal Translation

Versions

TOV   அங்கே ஏலாமும் அவனுடைய பிரேதக்குழியைச் சுற்றிலும் அவனுடைய எல்லா ஏராளமான ஜனமும் கிடக்கிறார்கள்; அவர்களெல்லாரும் பட்டயத்தால் வெட்டுண்டு விழுந்து, விருத்தசேதனமில்லாதவர்களாய் பூமியின் தாழ்விடங்களில் இறங்கினார்கள்; ஜீவனுள்ளோருடைய தேசத்திலே கெடியுண்டாக்கின அவர்கள், குழியில் இறங்கினவர்களோடேகூடத் தங்கள் அவமானத்தைச் சுமக்கிறார்கள்.
IRVTA   அங்கே ஏலாமும் அவனுடைய பிரேதக்குழியைச் சுற்றிலும் அவனுடைய எல்லா ஏராளமான மக்களும் கிடக்கிறார்கள்; அவர்கள் எல்லோரும் வாளால் வெட்டுண்டு விழுந்து, விருத்தசேதனம் இல்லாதவர்களாக பூமியின் தாழ்விடங்களில் இறங்கினார்கள்; வாழ்வோருடைய தேசத்திலே பயத்தை உண்டாக்கின அவர்கள், குழியில் இறங்கினவர்களுடன் தங்களுடைய அவமானத்தைச் சுமக்கிறார்கள்.
ERVTA   ‘ஏலாமும் இங்கே இருக்கிறது. அதன் படை அவள் கல்லறையைச் சுற்றியிருக்கிறது. அவர்கள் அனைவரும் போரில் கொல்லப்பட்டனர். அந்த அந்நியர்கள் பூமிக்குக் கீழே போய்விட்டார்கள். அவர்கள் உயிரோடு இருந்தபோது ஜனங்களை பயப்படுத்தினார்கள். ஆனால் அவர்கள் தம்மோடு அவமானத்தை எடுத்துக்கொண்டு ஆழமான குழிகளுக்குள் சென்றுவிட்டார்கள்.
RCTA   ஏலாமும், ஏலாமின் கூட்டத்தார் அனைவரும் அங்கே கிடக்கிறார்கள்; அவர்கள் எல்லாரும் வாளால் வெட்டுண்டு விழுந்தனர்; விருந்தசேதனம் செய்து கொள்ளாமல் பாதாளத்தில் இறங்கினார்கள்; முன்பு வாழ்வோரின் நாட்டில் அச்சத்தைக் கொடுத்தார்கள்; இப்பொழுது குழியில் இறங்கினவர்களோடு இழிவாகச் செத்தார்கள்;
ECTA   அதோ, ஏலாம் கிடக்கின்றாள்! அவளுடைய கல்லறையைச் சுற்றிலும் அவளுடைய மக்கள் கூட்டத்தார் கிடக்கின்றனர். அவர்கள் அனைவரும் வாளால் வெட்டுண்டு வீழ்ந்தவர்கள்; விருத்தசேதனமில்லாமல் கீழுலகுக்குள் சென்றவர்கள்; வாழ்வோரின் நாட்டில் அச்சத்தை உண்டாக்கியவர்கள். படுகுழிக்குள் செல்வோருடன் சேர்ந்து அவர்களும் தங்கள் மானக்கேட்டைச் சுமக்கின்றார்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us