Versions
TOV உங்களை அழிப்பதற்கு நான் அனுப்பும் அழிவுக்கேதுவான பஞ்சத்தின் கொடிய அம்புகளை நான்அவர்களுக்குள்ளே எய்யும்போது, நான் பஞ்சத்தை உங்கள்மேல் அதிகரிக்கப்பண்ணி, உங்கள் அப்பம் என்னும் ஆதரவுகோலை முறித்துப்போடுவேன்.
IRVTA உங்களை அழிப்பதற்கு நான் அனுப்பும் அழிவுக்கு ஏதுவான பஞ்சத்தின் கொடிய அம்புகளை நான் அவர்களுக்குள்ளே எய்யும்போது, நான் பஞ்சத்தை உங்கள்மேல் அதிகரிக்கச்செய்து, உங்களுடைய அப்பம் என்னும் ஆதரவுகோலை முறித்துப்போடுவேன்.
ERVTA உனக்கு பயங்கரமான பஞ்சத்தை அனுப்புவேன் என்று சொன்னேன். உன்னை அழிக்கக் கூடியவற்றை அனுப்புவேன் என்று நான் சொன்னேன். அப்பஞ்ச காலம் மீண்டும் மீண்டும் வரும். நான் உனக்குக் கொடுக்கப்படும் உணவுப் பொருள்களை நிறுத்திவிடுவேன் என்று சொன்னேன்.
RCTA உங்களை அடியோடு அழிக்கும்படி கொடிய பஞ்சமாகிய அழிவின் அம்பை உங்கள் மீது எய்து சிதறடிப்போம்; நீங்கள் பட்டினியால் சாகும்படி அப்பத்தின் சேமிப்பாகிய உங்கள் ஊன்று கோலை நாம் முறித்துப் போடுவோம்; ஆண்டவராகிய நாம் இதை முன்னே சொல்லுகிறோம்.
ECTA உங்களைப் பாழாக்குவதற்காக நான் வறட்சியின் கொடிய அம்புகளை அவர்கள்மீது எய்வேன். உங்களை அழிப்பதற்காகவே அவற்றை எய்வேன். உங்களிடையே வறட்சியை மிகுதிப்படுத்தி உங்கள் உணவின் தரவை நிறுத்திவிடுவேன்.