Versions
TOV உங்கள் பலிபீடங்கள் நிர்மூலமும் பாழுமாகும்படிக்கும், உங்கள் நரகலான விக்கிரகங்கள் தகர்க்கப்பட்டு, ஓய்ந்து, உங்கள் சிலைகள் வெட்டுண்டு, உங்கள் கிரியைகள் குலைந்துபோகும்படிக்கும், உங்களுடைய சகல வாசஸ்தலங்களிலுமுள்ள பட்டணங்கள் நிர்மூலமும் உங்கள் மேடைகள் பாழுமாகும்.
IRVTA உங்கள் பலிபீடங்கள் அழிவும் பாழுமாகும்படிக்கும், உங்களுடைய அசுத்தமான சிலைகள் தகர்க்கப்பட்டு, ஓய்ந்து, உங்களுடைய சிலைகள் வெட்டப்பட்டு, உங்களுடைய செயல்கள் குலைந்துபோகும்படிக்கும், உங்களுடைய எல்லா குடியிருப்புகளிலுமுள்ள பட்டணங்கள் அழிவும் உங்களுடைய மேடைகள் பாழுமாகும்.
ERVTA உங்களது ஜனங்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் தீமை ஏற்படும். அவர்களது நகரங்கள் கற்களின் குவியலாகும். அவர்களது மேடைகள் அழிக்கப்படும். ஏனென்றால், வழிபாட்டிற்குரிய அவ்விடங்கள் மீண்டும் பயன்படக் கூடாது. அப்பலிபீடங்கள் எல்லாம் அழிக்கப்படும். ஜனங்கள் நரகலான அச்சிலைகளை மீண்டும் வழிபடமாட்டார்கள். அச்சிலைகள் தகர்க்கப்படும். நீ செய்த அனைத்தும் அழிக்கப்படும்!
RCTA நீங்கள் குடியிருக்கும் எல்லா நாடுகளிலும் நகரங்கள் பாழாகும்; சிலைகளுக்கென நீங்கள் எழுப்பிய கோயில்களும் பீடங்களும் பலிமேடைகளும் உங்கள் கற்கூம்புகளும் இடிந்து தகர்ந்து தரைமட்டமாகும்; உங்கள் வேலைப்பாடுகள் யாவும் தவிடுபொடியாகும்.
ECTA நீங்கள் வாழும் எல்லா இடங்களிலும் நகர்கள் அழிக்கப்படும்; தொழுகை மேடுகள் சிதைக்கப்படும். இதனால் உங்கள் பலிபீடங்கள் இடிக்கப்பட்டுப் பாழாக்கப்படும். உங்கள் சிலைகள் உடைத்து நொறுக்கப்படும். உங்கள் தூப பீடங்கள் தகர்க்கப்படும். உங்கள் கைவேலைப்பாடுகள் அழித்தொழிக்கப்படும்.