Bible Versions
Bible Books

Ezra 9:12 (YLT) Young's Literal Translation

Versions

TOV   ஆதலால் நீங்கள் பலத்துக்கொண்டு, தேசத்தின் நன்மையைப் புசித்து, அதை நித்தியகாலமாக உங்கள் பிள்ளைகளுக்கு உம்பிளிக்கையாகப் பின்வைக்கும்படிக்கு, நீங்கள் உங்கள் குமாரத்திகளை அவர்களுடைய குமாரருக்குக் கொடாமலும், அவர்களுடைய குமாரத்திகளை உங்கள் குமாரருக்குக்கொள்ளாமலும், அவர்களுடைய சமாதானத்தையும் நன்மையையும் ஒருக்காலும் நாடாமலும் இருப்பீர்களாக என்றீரே.
IRVTA   ஆதலால் நீங்கள் பலத்துக்கொண்டு, தேசத்தின் நன்மையைச் சாப்பிட்டு, அதை நித்தியகாலமாக உங்கள் பிள்ளைகளுக்கு சொத்தாகப் பின்வைக்கும்படிக்கு, நீங்கள் உங்கள் மகள்களை அவர்களுடைய மகன்களுக்குக் கொடுக்காமலும், அவர்களுடைய மகள்களை உங்கள் மகன்களுக்குக் கொள்ளாமலும், அவர்களுடைய சமாதானத்தையும் நன்மையையும் ஒருக்காலும் நாடாமலும் இருப்பீர்களாக என்றீரே.
ERVTA   எனவே, இஸ்ரவேல் ஜனங்களே, அவர்களது பிள்ளைகளை உங்கள் பிள்ளைகள் மணந்துக்கொள்ள அனுமதிக்கவேண்டாம்! அவர்களோடு சேராதீர்கள். அவர்களது பொருட்களை விரும்பாதீர்கள்! எனது கட்டளைகளுக்குக் கீழ்ப்படியுங்கள். எனவே நீங்கள் பலமுள்ளவர்களாகவும், இந்த நாட்டிலுள்ள நல்லவற்றை அனுபவிப்பவர்களாகவும் இருப்பீர்கள். பிறகு இந்த நிலத்தை உமது பிள்ளைகளுக்குக் கொடுக்கலாம்" என்று சொன்னீர்.
RCTA   ஆதலால் நீங்கள் வலிமை பெறவும் நாட்டின் நலன்களை அனுபவிக்கவும் அந்நாட்டை என்றென்றும் உங்கள் மக்களுக்கு உரிமையாக விட்டுச்செல்லவும் வேண்டுமாயின், உங்களுக்கு இடையே பெண் கொள்வதும் கொடுப்பது இருக்கக்கூடாது; அன்றியும், அவர்களது சமாதானத்தையும் நலத்தையும் ஒருகாலும் நீங்கள் நாடக்கூடாது' என்றீரே.
ECTA   எனவே நீங்கள் வலிமை பெறவும் நாட்டின் நலன்களை அனுபவிக்கவும், அந்நாட்டை என்றென்றும் உங்கள் மக்களுக்கு உரிமையாக்கிக் கொள்ளவும் வேண்டுமாயின் வேற்றினத்தாருடன் பெண் கொள்வதும் கொடுப்பதும் இருத்தலாகாது. மேலும் அவர்களின் நல்லலுறவையும் நலத்தையும் என்றுமே நாடாலாகாது' என்று நீர் கட்டளையிட்டிருப்பதைப் புறக்கணித்தோம்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us