Versions
TOV சோவான் பட்டணத்தின் பிரபுக்களானவர்கள் மூடர்கள்; பார்வோனுடைய ஞானமுள்ள ஆலோசனைக்காரரின் ஆலோசனை மதியீனமாயிற்று: நான் ஞானிகளின் புத்திரன், நான் பூர்வ ராஜாக்களின் குமாரன் என்று பார்வோனுடனே எப்படிச் சொல்லுகிறீர்கள்?
IRVTA சோவான் பட்டணத்தின் பிரபுக்களாக இருப்பவர்கள் மூடர்கள்; பார்வோனுடைய ஞானமுள்ள ஆலோசனைக்காரரின் ஆலோசனை மதியீனமானது: நான் ஞானிகளின் மகன், நான் முந்தின ராஜாக்களின் மகன் என்று பார்வோனிடம் எப்படிச் சொல்கிறீர்கள்?
ERVTA சோவான் பட்டணத்திலுள்ள தலைவர்கள் மூடர்கள். ‘பார்வோனின் ஞானமுள்ள ஆலோசனைக்காரர்கள்’ தவறான ஆலோசனைகளைக் கொடுக்கிறார்கள். தம்மை ஞானிகள் என்று அந்தத் தலைவர்கள் கூறுகிறார்கள். அரசர்களின் பழைய குடும்பத்திலிருந்து வந்ததாக அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் தாம் நினைப்பதுபோல அவர்கள் அத்தனை புத்திசாலிகள் அல்ல.
RCTA தானீஸ் பட்டணத்துத் தலைவர்கள் அறிவிலிகள், பார்வோனின் ஞானமிக்க மந்திரிகள் மடமையான ஆலோசனை கொடுத்தார்கள்; "நான் ஞானிகளின் புதல்வனல்லனோ? பழங்கால மன்னர்களின் மைந்தன் அல்லனோ?" என்று நீங்கள் பார்வோனிடம் எவ்வாறு சொல்லக்கூடும்?
ECTA சோவானின் தலைவர்கள் மூடர்களே! பார்வோனின் ஞானமிகு அறிவுரையாளர் அறிவற்ற ஆலோசனை தருகின்றனர்; "நான் ஞானிகளின் மகன், பண்டைக்கால அரசர்களின் வழி வந்தவன்" என்று நீங்கள் ஒவ்வொருவரும் பார்வோனிடம் எப்படிச் சொல்லலாம்?