Versions
TOV கர்த்தரின் பயங்கரத்திற்கும், அவருடைய மகிமைப்பிரதாபத்திற்கும் விலகி, நீ கன்மலையில் ஒதுங்கி, மண்ணில் ஒளித்துக்கொள்.
IRVTA யெகோவாவின் பயங்கரத்திற்கும், அவருடைய மகிமையின் புகழ்ச்சிக்கும் விலகி, நீ கன்மலையில் ஒதுங்கி, மண்ணில் ஒளித்துக்கொள்.
ERVTA பாறைகளுக்கு பின்னால் மண்ணில் ஒளித்துக்கொள்ள போ! நீ கர்த்தருக்குப் பயப்படவேண்டும். அவரது மகா வல்லமையிலிருந்து மறைய வேண்டும்.
RCTA ஆண்டவருடைய அச்சம் தரும் திருமுன்னிருந்து விலகி, அவருடைய மாண்புறு மகிமையினின்று ஒதுங்கிக் கற்குகைகளில் நுழைந்து கொள்ளுங்கள், மண்ணில் பதுங்கி மறைந்து கொள்ளுங்கள்.
ECTA கற்பாறைக்குள் நுழைந்து கொள்ளுங்கள்; மண்ணில் பதுங்கி மறைந்து கொள்ளுங்கள்; ஆண்டவரின் அச்சம் தரும் திருமுன்னின்றும் அவரது உயர் மாட்சியினின்றும் அகலுங்கள்;