Versions
TOV பயப்படாதே, நீ வெட்கப்படுவதில்லை; நாணாதே, நீ இலச்சையடைவதில்லை; உன் வாலிபத்தின் வெட்கத்தை நீ மறந்து, உன் விதவையிருப்பின் நிந்தையை இனி நினையாதிருப்பாய்.
IRVTA பயப்படாதே, நீ வெட்கப்படுவதில்லை; வெட்கப்படாதே, நீ அவமானமடைவதில்லை; உன் வாலிபத்தின் வெட்கத்தை நீ மறந்து, உன் விதவையிருப்பின் நிந்தையை இனி நினைக்காமலிருப்பாய்.
ERVTA அஞ்சாதே! நீ ஏமாற்றம் அடையமாட்டாய். உனக்கு எதிராக ஜனங்கள் தீயவற்றைச் சொல்லமாட்டார்கள். நீ இலச்சையடைவதில்லை. நீ இளைஞனாக இருந்து அவமானத்தை உணர்ந்தாய். ஆனால், இப்போது அந்த அவமானத்தை மறந்துவிட்டாய். நீ உன் கணவனை இழந்தபோது அடைந்த அவமானத்தை இப்போது நினைக்கமாட்டாய்.
RCTA அஞ்சாதே, ஏனெனில் நீ அவமானம் அடையமாட்டாய், கலங்காதே, ஏனெனில் நீ வெட்கத்துக்கு உள்ளாகமாட்டாய்; உன் இளமையின் வெட்கத்தை மறந்துவிடுவாய், உன் கைம்மையின் நிந்தையை இனி நினைக்கமாட்டாய்;
ECTA அஞ்சாதே, நீ அவமானத்திற்குள்ளாகமாட்டாய்; வெட்கி நாணாதே, இனி நீ இழிவாக நடத்தப்படமாட்டாய்; உன் இளமையின் மானக்கேட்டை நீ மறந்துவிடுவாய்; உன் கைம்மையின் இழிநிலையை இனி நினைக்கமாட்டாய்.