Versions
TOV எங்கள் மீறுதல்கள் உமக்கு முன்பாக மிகுதியாயிருந்து, எங்கள் பாவங்கள் எங்களுக்கு விரோதமாய்ச் சாட்சி சொல்லுகிறது; எங்கள் மீறுதல்கள் எங்களோடே இருக்கிறது; எங்கள் அக்கிரமங்களை அறிந்திருக்கிறோம்.
IRVTA எங்கள் மீறுதல்கள் உமக்கு முன்பாக மிகுதியாயிருந்து, எங்கள் பாவங்கள் எங்களுக்கு விரோதமாகச் சாட்சி சொல்கிறது; எங்கள் மீறுதல்கள் எங்களுடன் இருக்கிறது; எங்கள் அக்கிரமங்களை அறிந்திருக்கிறோம்.
ERVTA ஏனென்றால், நாம் நமது தேவனுக்கு எதிராகப் பல தீமைகளைச் செய்திருக்கிறோம். நாம் தவறானவர்கள் என்பதை நமது பாவங்கள் காட்டுகின்றன. இவற்றையெல்லாம் செய்த குற்றவாளிகள் என்பதை நாம் அறிவோம்.
RCTA உம் கண் முன்னால் எங்கள் அக்கிரமங்கள் பெருகிப்போயின, எங்கள் பாவங்களும் எங்களுக்கு எதிராய்ச் சாட்சி கூறுகின்றன; எங்கள் அக்கிரமங்கள் எங்களோடு இருக்கின்றன, எங்கள் அநீதிகளை நாங்களே அறிந்திருக்கிறோம்.
ECTA உம் திருமுன் எங்கள் குற்றங்கள் பெருகியுள்ளன; எங்கள் பாவங்கள் எங்களுக்கு எதிராய்ச் சான்று சொல்கின்றன; எங்கள் குற்றங்கள் எங்களோடு தான் இருக்கின்றன; எங்கள் தீச்செயல்களை நாங்களே அறிவோம்.