Versions
TOV மோவாப் தேசத்தின் குடிகளே, நீங்கள் பட்டணங்களை விட்டுப்போய், கன்மலையில் தங்கி, குகையின் வாய் ஓரங்களில் கூடுகட்டுகிற புறாவுக்கு ஒப்பாயிருங்கள்.
IRVTA மோவாப் தேசத்தின் குடிகளே, நீங்கள் பட்டணங்களை விட்டுப்போய், கன்மலையில் தங்கி, குகையின் வாய் ஓரங்களில் கூடுகட்டுகிற புறாவுக்கு ஒப்பாயிருங்கள்.
ERVTA மோவாபின் ஜனங்களே, உங்கள் பட்டணங்களை விட்டு விலகுங்கள். பாறைகளுக்கு இடையில் வாழப் போங்கள். குகைப் பிளவுகளில் புறாக்கள் கூடுகட்டியிருப்பதுப்போல அமைத்துக்கொள்ளுங்கள்."
RCTA மோவாபின் குடிமக்களே, பட்டணங்களை விட்டு வெளியேறுங்கள், பாறைகளிலே போய்க் குடியேறுங்கள்; உயர்ந்த பாறைகளின் வெடிப்பு பொந்துகளில் கூடு கட்டி வாழும் புறாவைப் போல் இருங்கள்.
ECTA மோவாபின் குடிமக்களே, நகர்களை விட்டு வெளியேறுங்கள்; பாறைப் பகுதியில் குடியேறுங்கள். பாறையின் இடுக்குகளில் கூடுகட்டி வாழும் புறாவைப் போல் இருங்கள்.