Versions
TOV கர்த்தர் உங்களைப்போல உங்கள் சகோதரரையும் இளைப்பாறப்பண்ணி, அவர்களும் உங்கள் தேவனாகிய கர்த்தர் தங்களுக்குக் கொடுக்கும் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுமட்டும், அவர்களுக்கு உதவிசெய்யக்கடவீர்கள்; பின்பு நீங்கள் கர்த்தருடைய தாசனாகிய மோசே உங்களுக்கு யோர்தானுக்கு இப்புறத்தில் சூரியன் உதிக்கும் திசைக்கு நேராகக் கொடுத்த உங்கள் சுதந்தரமான தேசத்துக்குத் திரும்பி, அதைச் சுதந்தரித்துக் கொண்டிருப்பீர்களாக என்றான்.
IRVTA யெகோவா உங்களைப்போல உங்களுடைய சகோதரர்களையும் இளைப்பாறச்செய்து, அவர்களும் உங்களுடைய தேவனாகிய யெகோவா தங்களுக்குக் கொடுக்கும் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்வரை, அவர்களுக்கு உதவிசெய்வீர்களாக; பின்பு நீங்கள் யெகோவாவுடைய ஊழியக்காரனாகிய மோசே உங்களுக்கு யோர்தானுக்கு இந்தப்புறத்தில் சூரியன் உதிக்கும் திசைக்கு நேராகக் கொடுத்த உங்களுடைய சொந்தமான தேசத்திற்குத் திரும்பி, அதைச் சுதந்தரித்துக் கொண்டிருப்பீர்களாக” என்றான்.
ERVTA கர்த்தர் நீங்கள் தங்கியிருப்பதற்கு ஓர் இடத்தைக் கொடுத்தார். அதையே உங்கள் சகோதரருக்கும் செய்வார். தேவனாகிய கர்த்தர் அவர்களுக்குத் தருகின்ற தேசத்தைக் கைப்பற்றுவதற்கு நீங்கள் உதவ வேண்டும். பிறகு நீங்கள் யோர்தான் நதிக்குக் கிழக்கிலுள்ள உங்கள் சொந்த தேசத்திற்குத் திரும்பி வரலாம். கர்த்தருடைய ஊழியனாகிய மோசே உங்களுக்கு அத்தேசத்தைப் பிரித்துக் கொடுத்தான்" என்றான்.
RCTA ஆண்டவர் உங்களைப் போல் உங்கள் சகோதரர்களுக்கும் அமைதி அளித்து, உங்கள் ஆண்டவராகிய கடவுள் அவர்களுக்குக் கொடுக்கவிருக்கும் நாட்டை அவர்கள் உரிமையாக்கிக் கொள்ளும் வரை அவர்களுக்கு உதவியாகப் போர்புரியுங்கள். பிறகு யோர்தானுக்கு அக்கைரையில் கிழக்கே ஆண்டவருடைய அடியானான மோயீசன் உஙகளுக்குக் கொடுத்த உங்கள் சொந்த நாட்டுக்கு நீங்கள் திரும்பிவந்து அங்கு வாழ்ந்து வருவீர்கள்" என்றார்.
ECTA ஆண்டவர் உங்களுக்குச் செய்ததுபோல் உங்கள் சகோதரர்களையும் அந்நாட்டில் குடியேற்றி அவர்களுக்கும் அமைதி அருள்வார். அதுவரை அவர்களுக்கு உதவுங்கள். அவர்களும் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் கொடுக்கும் நாட்டை உரிமையாக்கிக் கொள்வர். பின்னர், கதிரவன் உதிப்பதும், கடவுளின் ஊழியர் மோசே உங்களுக்கு அளித்ததும், நீங்கள் ஏற்கனவே உடைமையாக்கிக் கொண்டதுமான கீழையோர்தானுக்குத் திரும்பிவந்து அந்நாட்டை உரிமையாக்கிக்கொள்வீர்கள். "