Versions
TOV முன்போல நமக்கு முன்பாக முறிய அடிக்கப்படுகிறார்கள் என்று பென்யமீன் புத்திரர் சொன்னார்கள்; இஸ்ரவேல் புத்திரரோ: அவர்களைப் பட்டணத்தை விட்டு அப்பாலேயிருக்கிற வழிகளிலே வரப்பண்ணும்படிக்கு, நாம் ஓடவேண்டும் என்று சொல்லியிருந்தார்கள்.
IRVTA முன்போல நமக்கு முன்பாக முறியடிக்கப்படுகிறார்கள் என்று பென்யமீனியர்கள் சொன்னார்கள்; இஸ்ரவேல் போர்வீரர்களோ: அவர்களைப் பட்டணத்தை விட்டு வெளியிலே இருக்கிற வழிகளில் வரச்செய்யும்படி, நாம் ஓடவேண்டும் என்று சொல்லியிருந்தார்கள்.
ERVTA பென்யமீன் மனிதர்கள், "முன்பு போலவே நாம் வெற்றி பெற்றுக்கொண்டிருக்கிறோம் "என்றனர். இஸ்ரவேல் மனிதர் ஓடிப்போய்க் கொண்டிருந்தார்கள், ஆனால் அது ஓர் தந்திரமே. பென்யமீன் மனிதர்களை நகரத்திலிருந்து வெகுதூரத்திற்கும், பெரும் பாதைகளுக்கும் அழைத்துவர விரும்பினர்.
RCTA வழக்கம்போல் நமக்கு முன்பாகச் சிதறி ஓடுகின்றனர்" என்று அவர்கள் எண்ணினர். ஆனால் இஸ்ராயேல் மக்கள் தோற்று ஓடுவது போல் பாசாங்கு செய்து பெஞ்சமின் மக்களை நகரிலிருந்து வெளியே கொண்டு வரும்படியாகவும், தப்பி ஓடுவது போல் மேற்கூறப்பட்ட இரு வழிகளிலும் வந்து சேரும்படியாகவும் அவர்கள் திட்டமிட்டிருந்தனர்.
ECTA எனவே பென்யமின் மக்கள் முன்பு போலவே நம் முன்னிலையில் இஸ்ரயேல் மக்கள் விரட்டியடிக்கப்பட்டனர் என்று கூறிக்கொண்டனர். இஸ்ரயேல் மக்களோ நாம் தப்பி ஓடுவதுபோல நடித்து அவர்களை நகரிலிருந்து நெடுஞ்சாலைக்கு இழுப்போம் என்று திட்டமிட்டிருந்தனர்.