Versions
TOV ஆறுநாளும் வேலைசெய்யவேண்டும்; ஏழாம்நாள் பரிசுத்த சபைகூடுதலான ஓய்வுநாள், அதில் ஒரு வேலையும் செய்யவேண்டாம்; அது உங்கள் வாசஸ்தலங்களிலெல்லாம் கர்த்தருக்கென்று ஓய்ந்திருக்கும் நாளாயிருப்பதாக.
IRVTA “ஆறுநாட்களும் வேலைசெய்யவேண்டும்; ஏழாம்நாள் பரிசுத்த சபைகூடுதலான ஓய்வுநாள், அதில் ஒரு வேலையும் செய்யவேண்டாம்; அது உங்கள் குடியிருப்புகளிலெல்லாம் யெகோவாவுக்கென்று ஓய்ந்திருக்கும் நாளாக இருப்பதாக.
ERVTA "ஆறு நாட்கள் வேலை செய்யுங்கள். ஏழாவது நாள் ஓய்விற்குரிய சிறப்பு நாள். பரிசுத்தமான சபை கூடும் நாள். அன்று ஒரு வேலையும் செய்யக் கூடாது. இது கர்த்தருக்குரிய சிறப்பு ஓய்வு நாளாக உங்கள் வீடுகளில் விளங்கவேண்டும்.
RCTA ஆறு நாள் வேலை செய்வீர்கள்; ஏழாம் நாள் சாபத் என்னும் ஓய்வு நாளாகையால் பரிசுத்தமுள்ளதென்று சொல்லப்படும். அதிலே ஒரு வேலையும் செய்ய வேண்டாம். அது உங்கள் உறைவிடங்களிலெல்லாம் ஆண்டவருடைய ஓய்வு நாளாய் இருக்கும்.
ECTA ஆறு நாள்கள் நீங்கள் வேலை செய்யலாம். ஏழாம் நாளோ முழுமையாக ஓய்வெடுக்கும் நாள்; புனித சபை கூடும் நாள். அன்று நீங்கள் ஒரு வேலையும் செய்யவேண்டாம். நீங்கள் வாழும் இடமெங்கும் அது ஆண்டவருக்கான ஓய்வுநாள்.