Versions
TOV நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என் தொண்டை வறண்டுபோயிற்று; என் தேவனுக்கு நான் காத்திருக்கையால், என் கண்கள் பூத்துப்போயிற்று.
IRVTA நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்;
என்னுடைய தொண்டை வறண்டுபோனது;
என் தேவனுக்கு நான் காத்திருக்கும்போது,
என்னுடைய கண்கள் பூத்துப்போனது.
ERVTA உதவி வேண்டிக் கூப்பிடுவதால் நான் சோர்ந்து போகிறேன். என் தொண்டை புண்ணாகிவிட்டது. நான் காத்திருக்கிறேன், என் கண்கள் நோகும்வரை உமது உதவிக்காக நோக்கியிருக்கிறேன்.
RCTA கூவிக் கூவி களைத்து விட்டேன்; என்தொண்டையும் வறண்டு போயிற்று: என் இறைவன் துணையை எதிர்த்துப் பார்த்து என் கண்களும் பூத்துப்போயின.
ECTA கத்திக் கத்திக் களைத்துப்போனேன்; தொண்டையும் வறண்டுபோயிற்று; என் கடவுளாம் உமக்காகக் காத்திருந்து என் கண்கள் பூத்துப்போயின;