Versions
TOV உண்மையுள்ள சாட்சியும், மரித்தோரிலிருந்து முதற்பிறந்தவரும், பூமியின் ராஜாக்களுக்கு அதிபதியுமாகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
IRVTA உண்மையுள்ள சாட்சியும், மரித்தோரிலிருந்து முதலில் பிறந்தவரும், பூமியின் ராஜாக்களுக்கு அதிபதியுமாகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
ERVTA இயேசுவே உண்மையுள்ள சாட்சியாக இருக்கிறார். மரணத்தில் இருந்து உயிர்த்தெழுந்தவர்களுள் முதலானவர் அவரே ஆவார். பூமியில் உள்ள அரசர்களுக்கு எல்லாம் அதிபதி இயேசு.
RCTA இவரே நம்பிக்கைக்குரிய சாட்சி, இறந்தோரிலிருந்து எழுந்தவருள் தலைப்பேறானவர், மண்ணுலக அரசர்களுக்குத் தலைமையானவர். இவர் நமக்கு அன்புசெய்து தமது இரத்தத்தினால் நம்முடைய பாவங்களினின்று நம்மை விடுவித்தார்.
ECTA இந்தக் கிறிஸ்துவே நம்பிக்கைக்குரிய சாட்சி; இறந்தோருள் முதலில் உயிர்பெற்று எழுந்தவர்; மண்ணுலக அரசர்களுக்குத் தலைவர். இவர் நம்மீது அன்புகூர்ந்தார்; தமது சாவு வாயிலாக நம் பாவங்களிலிருந்து நம்மை விடுவித்தார்.