Versions
TOV இப்பொழுதோ நாம் பழமையான எழுத்தின்படியல்ல, புதுமையான ஆவியின்படி ஊழியஞ்செய்யத்தக்கதாக, நம்மைக் கட்டியிருந்த நியாயப்பிரமாணத்துக்கு நாம் மரித்தவர்களாகி, அதினின்று விடுதலையாக்கப்பட்டிருக்கிறோம்.
IRVTA இப்பொழுதோ நாம் பழமையான எழுத்தின்படி இல்லை, புதுமையான ஆவியின்படி ஊழியம் செய்வதற்காக, நம்மைக் கட்டியிருந்த நியாயப்பிரமாணத்திற்கு நாம் மரித்தவர்களாகி, அதில் இருந்து விடுதலையாக்கப்பட்டிருக்கிறோம். PS
ERVTA கடந்த காலத்தின் சட்டவிதிகள் நம்மைச் சிறைக் கைதிகளைப் போன்று வைத்திருந்தன. ஆனால் அந்தப் பழையவிதிகள் மறைந்துபோனது. நாமும் விதிகளினின்றும் விடுவிக்கப்பட்டோம். எனவே இப்போது புதிய வழியில் தேவனுக்கு சேவை செய்கிறோம். பழைய வழியில் சட்டவிதிக்குக் கட்டுப்பட்டு இருக்கவில்லை. இப்போது பரிசுத்த ஆவியானவரோடும் இருக்கிறோம்.
RCTA இப்பொழுதோ நாம் கட்டுண்டிருந்த சட்டத்தைப் பொருத்தமட்டில் இறந்து, அதனின்று விடுதலை பெற்றோம். ஆகையால், எழுதிய சட்டத்திற்குரிய பழைய நெறியில் இனி ஊழியம் செய்வதை விட்டு ஆவியானவருக்குரிய புதிய நெறியில் ஊழியம் செய்ய முடிந்தது.
ECTA ஆனால் இப்பொழுது நம்மை ஒடுக்கி வைத்திருந்த சட்டத்தைப் பொறுத்த மட்டில் நாம் இறந்துவிட்டால், அச்சட்டத்தினின்று விடுதலை பெற்றோம். ஆகையால் எழுதப்பட்ட சட்டத்திற்குரிய பழைய நெறியில் நாம் ஊழியம் செய்வதைவிட்டுத் தூய ஆவி அருளும் புதிய நெறியில் ஊழியம் செய்ய முடிகிறது.