Versions
TOV ஏற்றகாலங்களிலே நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய கட்டளையின்படி எனக்கு ஒப்புவிக்கப்பட்ட பிரசங்கத்தினாலே தமது வார்த்தையை வெளிப்படுத்தினார்.
IRVTA ஏற்றகாலங்களிலே நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய கட்டளையின்படி எனக்கு ஒப்புவிக்கப்பட்ட பிரசங்கத்தினாலே தமது வார்த்தையை வெளிப்படுத்தினார். PS
ERVTA தீத்துவுக்கு எழுதிக்கொள்வது: நாம் ஒன்றாகப் பகிர்ந்துகொள்கிற விசுவாசத்தில் நீ எனக்கு உண்மையான மகனைப் போன்றவன். கிருபையும், சமாதானமும் பிதாவாகிய தேவனிடமிருந்தும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உண்டாவதாக.
RCTA இவ்வாழ்வை எல்லாக் காலங்களுக்கு முன்பே பொய்யாக் கடவுள் தாமே வாக்களித்தார். அதற்கொப்ப, குறிப்பிட்ட காலத்தில் நற்செய்தியறிவிப்பின் வாயிலாகத் தம் வார்த்தையை அவர் வெளிப்படுத்தினார். இந்நற்செய்தியறிவிப்பு நம் மீட்பராகிய கடவுளின் கட்டளைப்படி என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ECTA ஏற்ற காலத்தில் நற்செய்தியைப் பறைசாற்றியதன் வாயிலாகத் தம் செய்தியை வெளிப்படுத்தினார். இந்நற்செய்தியைப் பறைசாற்றும் பணி நம் மீட்பராம் கடவுள் இட்ட கட்டளைப்படி என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.