|
|
1. உன் சகோதரனுடைய மாடாவது ஆடாவது வழிதப்பிப்போகிறதைக் கண்டாயானால், அதைக் காணாதவன்போல் இராமல், அதை உன் சகோதரனிடத்துக்குத் திருப்பிக்கொண்டு போகக்கடவாய்.
|
1. Thou shalt not H3808 see H7200 H853 thy brother H251 's ox H7794 or H176 H853 his sheep H7716 go astray H5080 , and hide thyself H5956 from H4480 them : thou shalt in any case bring them again H7725 H7725 unto thy brother H251 .
|
2. உன் சகோதரன் உனக்குச் சமீபமாயிராமலும், உனக்கு அறிமுகமாயிராமலும் இருந்தால், நீ அதை உன் வீட்டிற்குக் கொண்டுபோய், அதை உன் சகோதரன் தேடிவருமட்டும் உன்னிடத்திலே வைத்து, அவனுக்குத் திரும்பக் கொடுக்கக்கடவாய்.
|
2. And if H518 thy brother H251 be not H3808 nigh H7138 unto H413 thee , or if thou know H3045 him not H3808 , then thou shalt bring H622 it unto H413 H8432 thine own house H1004 , and it shall be H1961 with H5973 thee until H5704 thy brother H251 seek after H1875 it , and thou shalt restore H7725 it to him again.
|
3. அப்படியே அவன் கழுதையைக்குறித்தும் செய்யக்கடவாய்; அவன் வஸ்திரத்தைக்குறித்தும் அப்படியே செய்யக்கடவாய்; உன் சகோதரனிடத்திலிருந்து காணாமற்போனவைகளில் எதையாகிலும் கண்டுபிடித்தாயானால் அப்படியே செய்யக்கடவாய்; அவைகளை நீ காணாதவன் போல் விட்டுப்போகலாகாது.
|
3. In like manner H3651 shalt thou do H6213 with his ass H2543 ; and so H3651 shalt thou do H6213 with his raiment H8071 ; and with all H3605 lost thing H9 of thy brother H251 's, which H834 he hath lost H6 , and thou hast found H4672 , shalt thou do H6213 likewise H3651 : thou mayest H3201 not H3808 hide thyself H5956 .
|
4. உன் சகோதரனுடைய கழுதையாவது அவனுடைய மாடாவது வழியிலே விழுந்துகிடக்கிறதைக் கண்டாயானால், அதைக் காணாதவன்போல விட்டுப்போகாமல், அவனோடேகூட அதைத் தூக்கியெடுத்துவிடுவாயாக.
|
4. Thou shalt not H3808 see H7200 H853 thy brother H251 's ass H2543 or H176 his ox H7794 fall down H5307 by the way H1870 , and hide thyself H5956 from H4480 them : thou shalt surely help him to lift them up again H6965 H6965 H5973 .
|
5. புருஷரின் உடைகளை ஸ்திரீகள் தரிக்கலாகாது, ஸ்திரீகளின் உடைகளைப் புருஷர் தரிக்கலாகாது; அப்படிச் செய்கிறவர்கள் எல்லாரும் உன் தேவனாகிய கர்த்தருக்கு அருவருப்பானவர்கள்.
|
5. The woman H802 shall not H3808 wear H1961 that which pertaineth H3627 unto a man H1397 , neither H3808 shall a man H1397 put on H3847 a woman H802 's garment H8071 : for H3588 all H3605 that do H6213 so H428 are abomination H8441 unto the LORD H3068 thy God H430 .
|
6. வழியருகே ஒரு மரத்திலாவது தரையிலாவது குஞ்சுகளாயினும் முட்டைகளாயினுமுள்ள ஒரு குருவிக்கூடு உனக்குத் தென்படும்போது, தாயானது குஞ்சுகளின் மேலாவது முட்டைகளின் மேலாவது அடைகாத்துக்கொண்டிருந்தால், நீ குஞ்சுகளோடே தாயையும் பிடிக்கலாகாது.
|
6. If H3588 a bird H6833 's nest H7064 chance to be H7122 before H6440 thee in the way H1870 in any H3605 tree H6086 , or H176 on H5921 the ground H776 , whether they be young ones H667 , or H176 eggs H1000 , and the dam H517 sitting H7257 upon H5921 the young H667 , or H176 upon H5921 the eggs H1000 , thou shalt not H3808 take H3947 the dam H517 with H5921 the young H1121 :
|
7. தாயைப் போகவிட்டு, குஞ்சுகளை மாத்திரம் எடுத்துக்கொள்ளலாம்; அப்பொழுது நீ நன்றாயிருப்பாய்; உன் நாட்களும் நீடித்திருக்கும்.
|
7. But thou shalt in any wise H7971 H853 let the dam H517 go H7971 , and take H3947 the young H1121 to thee; that H4616 it may be well H3190 with thee , and that thou mayest prolong H748 thy days H3117 .
|
8. நீ புது வீட்டைக் கட்டினால், ஒருவன் உன் மெத்தையிலிருந்து விழுகிறதினாலே, நீ இரத்தப்பழியை உன் வீட்டின்மேல் சுமத்திக்கொள்ளாதபடிக்கு, அதற்குக் கைப்பிடிசுவரைக் கட்டவேண்டும்.
|
8. When H3588 thou buildest H1129 a new H2319 house H1004 , then thou shalt make H6213 a battlement H4624 for thy roof H1406 , that thou bring H7760 not H3808 blood H1818 upon thine house H1004 , if H3588 any man H5307 fall H5307 from H4480 thence.
|
9. உன் திராட்சத்தோட்டத்திலே பற்பலவிதமான விதையை விதைக்காயாக; இப்படிச் செய்தால் நீ விதைத்தவைகளின் பயிரையும், திராட்சத்தோட்டத்தின் பலனையும் தீட்டுப்படுத்துவாய்.
|
9. Thou shalt not H3808 sow H2232 thy vineyard H3754 with divers seeds H3610 : lest H6435 the fruit H4395 of thy seed H2233 which H834 thou hast sown H2232 , and the fruit H8393 of thy vineyard H3754 , be defiled H6942 .
|
10. மாட்டையும், கழுதையையும் பிணைத்து உழாதிருப்பாயாக.
|
10. Thou shalt not H3808 plow H2790 with an ox H7794 and an ass H2543 together H3162 .
|
11. ஆட்டுமயிரும் பஞ்சுநூலும் கலந்த வஸ்திரத்தை உடுத்திக்கொள்ளாயாக.
|
11. Thou shalt not H3808 wear H3847 a garment of divers sorts H8162 , as of woolen H6785 and linen H6593 together H3162 .
|
12. நீ தரித்துக்கொள்ளுகிற உன் மேல்சட்டையின் நான்கு ஓரங்களிலும் தொங்கல்களை உண்டுபண்ணுவாயாக.
|
12. Thou shalt make H6213 thee fringes H1434 upon H5921 the four H702 quarters H3671 of thy vesture H3682 , wherewith H834 thou coverest H3680 thyself .
|
13. ஒரு ஸ்திரீயை விவாகம்பண்ணின ஒருவன் அவளிடத்தில் பிரவேசித்த பின்பு அவளை வெறுத்து:
|
13. If H3588 any man H376 take H3947 a wife H802 , and go in H935 unto H413 her , and hate H8130 her,
|
14. நான் இந்த ஸ்திரீயை விவாகம்பண்ணி, அவளிடத்தில் சேர்ந்தபோது கன்னிமையைக் காணவில்லை என்று அவள் மேல் ஆவலாதியான விசேஷங்களைச் சாற்றி, அவளுக்கு அவதூறு உண்டாக்கினால்;
|
14. And give H7760 occasions H5949 of speech H1697 against her , and bring up H3318 an evil H7451 name H8034 upon H5921 her , and say H559 , I took H3947 H853 this H2063 woman H802 , and when I came H7126 to H413 her , I found H4672 her not H3808 a maid H1331 :
|
15. அந்த ஸ்திரீயின் தகப்பனும் அவள் தாயும் அவளுடைய கன்னிமையின் அடையாளத்தைப் பட்டணத்து வாசலிலுள்ள மூப்பரிடத்தில் கொண்டுவரக்கடவர்கள்.
|
15. Then shall the father H1 of the damsel H5291 , and her mother H517 , take H3947 and bring forth H3318 H853 the tokens of the damsel H5291 's virginity H1331 unto H413 the elders H2205 of the city H5892 in the gate H8179 :
|
16. அங்கே அந்தப் பெண்ணின் தகப்பன்: என் மகளை இந்த மனிதனுக்கு மனைவியாகக் கொடுத்தேன், இவன் அவளை வெறுத்து,
|
16. And the damsel H5291 's father H1 shall say H559 unto H413 the elders H2205 , I gave H5414 H853 my daughter H1323 unto this H2088 man H376 to wife H802 , and he hateth H8130 her;
|
17. நான் உன் மகளிடத்தில் கன்னிமையைக் காணவில்லையென்று ஆவலாதியான விசேஷங்களை அவள்மேல் சாற்றுகிறான்; என் மகளுடைய கன்னிமையின் அடையாளம் இங்கே இருக்கிறது என்று மூப்பரிடத்தில் சொல்வானாக; பின்பு பட்டணத்து மூப்பருக்கு முன்பாக அந்த வஸ்திரத்தை விரிக்கக்கடவர்கள்.
|
17. And, lo H2009 , he H1931 hath given H7760 occasions H5949 of speech H1697 against her , saying H559 , I found H4672 not H3808 thy daughter H1323 a maid H1331 ; and yet these H428 are the tokens of my daughter H1323 's virginity H1331 . And they shall spread H6566 the cloth H8071 before H6440 the elders H2205 of the city H5892 .
|
18. அப்பொழுது அந்தப் பட்டணத்து மூப்பர் அந்த மனிதனைப் பிடித்து, அவனைத் தண்டித்து,
|
18. And the elders H2205 of that H1931 city H5892 shall take H3947 H853 that man H376 and chastise H3256 him;
|
19. அவன் இஸ்ரவேலில் ஒரு கன்னியை அவதூறுபண்ணினதினாலே, அவன் கையில் நூறு வெள்ளிக்காசை அபராதமாக வாங்கி, பெண்ணின் தகப்பனுக்குக் கொடுக்கக்கடவர்கள்; அவளோ அவனுக்கு மனைவியாயிருக்க வேண்டும்; அவன் தன் ஜீவனுள்ளளவும் அவளைத் தள்ளிவிடக்கூடாது.
|
19. And they shall amerce H6064 him in a hundred H3967 shekels of silver H3701 , and give H5414 them unto the father H1 of the damsel H5291 , because H3588 he hath brought up H3318 an evil H7451 name H8034 upon H5921 a virgin H1330 of Israel H3478 : and she shall be H1961 his wife H802 ; he may H3201 not H3808 put her away H7971 all H3605 his days H3117 .
|
20. அந்தப் பெண்ணிடத்தில் கன்னிமை காணப்படவில்லையென்னும் சங்கதி மெய்ப்பட்டதேயானால்,
|
20. But if H518 this H2088 thing H1697 be H1961 true H571 , and the tokens of virginity H1331 be not H3808 found H4672 for the damsel H5291 :
|
21. அந்தப் பெண்ணை அவள் தகப்பனுடைய வீட்டுவாசலுக்கு முன்பாகக் கொண்டுவந்து, அவள் இஸ்ரவேலில் மதிகெட்ட காரியத்தைச் செய்து, தன் தகப்பன் வீட்டிலே வேசித்தனம்பண்ணினபடியினாலே, அவளுடைய பட்டணத்து மனிதர் அவளைக் கல்லெறிந்து கொல்லக்கடவர்கள்; இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்கக்கடவாய்.
|
21. Then they shall bring out H3318 H853 the damsel H5291 to H413 the door H6607 of her father H1 's house H1004 , and the men H376 of her city H5892 shall stone H5619 her with stones H68 that she die H4191 : because H3588 she hath wrought H6213 folly H5039 in Israel H3478 , to play the whore H2181 in her father H1 's house H1004 : so shalt thou put evil away H1197 H7451 from among H4480 H7130 you.
|
22. புருஷனுக்கு விவாகம்பண்ணப்பட்ட ஸ்திரீயோடே ஒருவன் சயனிக்கக் கண்டுபிடிக்கப்பட்டால், அந்த ஸ்திரீயோடே சயனித்த மனிதனும் அந்த ஸ்திரீயும் இருவரும் சாகவேண்டும்; இப்படியே தீமையை இஸ்ரவேலிலிருந்து விலக்கக்கடவாய்.
|
22. If H3588 a man H376 be found H4672 lying H7901 with H5973 a woman H802 married H1166 to a husband H1167 , then they shall both H1571 H8147 of them die H4191 , both the man H376 that lay H7901 with H5973 the woman H802 , and the woman H802 : so shalt thou put away H1197 evil H7451 from Israel H4480 H3478 .
|
23. கன்னிகையான ஒரு பெண் ஒருவனுக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், மற்றொருவன் அவளை ஊருக்குள்ளே கண்டு, அவளோடே சயனித்தால்,
|
23. If H3588 a damsel H5291 that is a virgin H1330 be H1961 betrothed H781 unto a husband H376 , and a man H376 find H4672 her in the city H5892 , and lie H7901 with H5973 her;
|
24. அப்பொழுது அந்தப் பெண் ஊருக்குள்ளிருந்தும் கூக்குரலிடாததினாலும், அந்த மனிதன் பிறனுடைய மனைவியைக் கற்பழித்தபடியினாலும், இருவரையும் அந்தப் பட்டணத்து வாசலுக்குமுன் கொண்டுபோய், அவர்கள்மேல் கல்லெறிந்து கொல்லக்கடவீர்கள்; இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்கக்கடவாய்.
|
24. Then ye shall bring them both out H3318 H853 H8147 unto H413 the gate H8179 of that H1931 city H5892 , and ye shall stone H5619 them with stones H68 that they die H4191 ; H853 the damsel H5291 , because H5921 H1697 H834 she cried H6817 not H3808 , being in the city H5892 ; and the man H376 , because H5921 H1697 H834 he hath humbled H6031 H853 his neighbor H7453 's wife H802 : so thou shalt put away H1197 evil H7451 from among H4480 H7130 you.
|
25. ஒருவனுக்கு நியமிக்கப்பட்ட பெண்ணை வெளியிலே ஒருவன் கண்டு, அவளைப் பலவந்தமாய்ப் பிடித்து, அவளோடே சயனித்தானேயாகில், அவளோடே சயனித்த மனிதன் மாத்திரம் சாகக்கடவன்.
|
25. But if H518 a man H376 find H4672 H853 a betrothed H781 damsel H5291 in the field H7704 , and the man H376 force H2388 her , and lie H7901 with H5973 her : then the man H376 only H905 that H834 lay H7901 with H5973 her shall die H4191 :
|
26. பெண்ணுக்கு ஒன்றும் செய்யலாகாது; பெண்ணின்மேல் சாவுக்கு ஏதுவான குற்றம் இல்லை; இக்காரியம் ஒருவன் மற்றொருவன்மேல் எழும்பி அவனுடைய ஜீவனை வாங்கினதுபோல இருக்கிறது.
|
26. But unto the damsel H5291 thou shalt do H6213 nothing H3808 H1697 ; there is in the damsel H5291 no H369 sin H2399 worthy of death H4194 : for H3588 as H834 when a man H376 riseth H6965 against H5921 his neighbor H7453 , and slayeth H7523 H5315 him , even so H3651 is this H2088 matter H1697 :
|
27. வெளியிலே அவன் அவளைக் கண்டுபிடித்தான்; நியமிக்கப்பட்ட பெண் அப்பொழுது கூக்குரலிட்டும் அவளைக் காப்பாற்றுவார் இல்லாமற்போயிற்று.
|
27. For H3588 he found H4672 her in the field H7704 , and the betrothed H781 damsel H5291 cried H6817 , and there was none H369 to save H3467 her.
|
28. நியமிக்கப்படாத கன்னியாஸ்திரீயாகிய ஒரு பெண்ணை ஒருவன் கண்டு, கையைப் பிடித்து அவளோடே சயனிக்கையில், அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால்,
|
28. If H3588 a man H376 find H4672 a damsel H5291 that is a virgin H1330 , which H834 is not H3808 betrothed H781 , and lay hold H8610 on her , and lie H7901 with H5973 her , and they be found H4672 ;
|
29. அவளோடே சயனித்த மனிதன் பெண்ணின் தகப்பனுக்கு ஐம்பது வெள்ளிக்காசைக் கொடுக்கக்கடவன்; அவன் அவளைக் கற்பழித்தபடியினால், அவள் அவனுக்கு மனைவியாயிருக்கவேண்டும்; அவன் உயிரோடிருக்குமளவும் அவளைத் தள்ளிவிடக்கூடாது.
|
29. Then the man H376 that lay H7901 with H5973 her shall give H5414 unto the damsel H5291 's father H1 fifty H2572 shekels of silver H3701 , and she shall be H1961 his wife H802 ; because H8478 H834 he hath humbled H6031 her , he may H3201 not H3808 put her away H7971 all H3605 his days H3117 .
|
30. ஒருவனும் தன் தகப்பனுடைய மனைவியைச் சேரலாகாது; தன் தகப்பன் மானத்தை அவன் வெளிப்படுத்தலாகாது.
|
30. A man H376 shall not H3808 take H3947 H853 his father H1 's wife H802 , nor H3808 discover H1540 his father H1 's skirt H3671 .
|