Bible Language

Psalms 86:5 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   ஆண்டவரே, நீர் நல்லவரும், மன்னிக்கிறவரும், உம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவர்மேலும் கிருபை மிகுந்தவருமாயிருக்கிறீர்.
IRVTA   ஆண்டவரே, நீர் நல்லவரும், மன்னிக்கிறவரும்,
உம்மை நோக்கிக் கூப்பிடுகிற எல்லோர்மேலும் கிருபை மிகுந்தவருமாக இருக்கிறீர்.
ERVTA   ஆண்டவரே, நீர் நல்லவர், கிருபையுள்ளவர். உமது ஜனங்கள் உதவிக்காக உம்மைக் கூப்பிடுவார்கள். நீர் உண்மையாகவே அந்த ஜனங்களை நேசிக்கிறீர்.
RCTA   ஏனெனில் ஆண்டவரே, நீர் நல்லவர்; கருணைமிக்கவர்: உம்மைக் கூவியழைக்கிற யாவருக்கும் மிகுந்த அருளன்பு காட்டுகிறவர்.
ECTA   ஏனெனில் என் தலைவரே! நீர் நல்லவர்; மன்னிப்பவர்; உம்மை நோக்கி மன்றாடும் அனைவருக்கும் பேரன்பு காட்டுபவர்.