Bible Versions
Bible Books

1 Samuel 25:8 (GNTWHRP) Westcott-Hort Greek New Testament

Versions

TOV   உம்முடைய வேலைக்காரரைக் கேளும்; அவர்கள் உமக்குச் சொல்லுவார்கள்; ஆதலால் இந்த வாலிபருக்கு உம்முடைய கண்களிலே தயை கிடைக்கவேண்டும்; நல்ல நாளில் வந்தோம்; உம்முடைய கைக்கு உதவுவதை உம்முடைய ஊழியக்காரருக்கும், உம்முடைய குமாரனாகிய தாவீதுக்கும் கொடுக்கும்படி வேண்டுகிறேன் என்று சொல்லுங்கள் என்றான்.
IRVTA   உம்முடைய வேலைக்காரரைக் கேளும்; அவர்கள் உமக்குச் சொல்லுவார்கள்; ஆதலால் இந்த வாலிபர்களுக்கு உம்முடைய கண்களிலே தயை கிடைக்கவேண்டும்; நல்ல நாளில் வந்தோம்; உம்முடைய கையில் உள்ளதை உம்முடைய ஊழியக்காரர்களுக்கும், உம்முடைய மகனான தாவீதுக்கும் கொடுக்கும்படி வேண்டுகிறேன் என்று சொல்லுங்கள் என்றான்.
ERVTA   உன் வேலைக்காரரிடம் கேட்டுப்பார். அவர்கள் உண்மையைக் கூறுவார்கள். என் இளைஞரிடம் கருணையோடு இரு. இந்த மகிழ்ச்சியான நேரத்தில் உன்னிடம் வந்திருக்கிறோம். உன்னால் முடிந்ததை இவர்களுக்குக் கொடு. இதை எனக்காகவும் உனது நண்பன் தாவீதிற்காகவும் செய்" என்றான்.
RCTA   உம் வேலைக்காரரைக் கேளும்; உமக்குச் சொல்வார்கள். ஆதலால் உம் அடியார் எங்களுக்கு உம் கண்களில் தயை கிடைப்பதாக. நல்ல நாளிலன்றோ வந்தோம்? உமது கையில் அகப்படுவதை உம் அடியார்களுக்கும் உம் மகனாகிய தாவீதுக்கும் கொடும்' என்று சொல்வீர்கள்" என்று சொல்லி அனுப்பினான்.
ECTA   உம் பணியாளர்களை கேளும்; அவர்கள் உமக்கு சொல்வார்கள். ஆதலால் இந்த இளைஞர்களுக்கு உம் கண்களில் தயவு கிடைக்கட்டும். ஏனெனில் நாங்கள் ஒரு திருவிழா நாளில் வந்துள்ளோம். உம்மால் கொடுக்க முடிந்ததை உம் அடியார்களுக்கும் உம் புதல்வன் தாவீதுக்கும் தந்தருள்க! எனக் கூறுங்கள்" என்று சொல்லியனுப்பினார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us