Bible Versions
Bible Books

2 Samuel 3:21 (GNTWHRP) Westcott-Hort Greek New Testament

Versions

TOV   பின்பு அப்னேர் தாவீதை நோக்கி: நான் எழுந்துபோய், இஸ்ரவேலரை எல்லாம் உம்மோடே உடன்படிக்கைபண்ணும்படிக்கு, ராஜாவாகிய என் ஆண்டவனிடத்தில் சேர்த்துக்கொண்டுவருகிறேன்; அதினாலே உம்முடைய ஆத்துமா அரசாள விரும்புகிற இடமெல்லாம் அரசாளுவீர் என்றான்; அப்படியே தாவீது அப்னேரை அனுப்பிவிட்டான்; அவன் சமாதானத்தோடேபோனான்.
IRVTA   பின்பு அப்னேர் தாவீதை நோக்கி: நான் எழுந்துபோய், இஸ்ரவேலர்களை எல்லாம் உம்மோடு உடன்படிக்கைசெய்யும்படி, ராஜாவான என்னுடைய ஆண்டவனிடத்தில் சேர்த்துக்கொண்டுவருகிறேன்; அதினாலே உம்முடைய ஆத்துமா அரசாள விரும்புகிற இடமெல்லாம் அரசாளுவீர் என்றான்; அப்படியே தாவீது அப்னேரை அனுப்பிவிட்டான்; அவன் சமாதானத்தோடு போனான். PS
ERVTA   அப்னேர் தாவீதை நோக்கி, "எனது ஆண்டவனும், அரசருமானவரே! நான் அனைத்து இஸ்ரவேலரையும் உம்மிடம் அழைத்துவர அனுமதியும். அப்போது அவர்கள் உம்மோடு ஒரு ஒப்பந்தம் செய்துக்கொள்வார்கள். பின் நீர் விரும்பியதுபோல் இஸ்ரவேலை ஆளலாம்" என்றான். எனவே தாவீது அப்னேரை அனுப்பிவிட்டான். அப்னேர் சமாதானமாய் திரும்பினான்.
RCTA   பின்பு அப்நேர் தாவீதை நோக்கி, "நான் எழுந்து சென்று என் தலைவராகிய அரசரிடம் இஸ்ராயேலர் அனைவரையும் கூட்டிக் கொண்டு வருகிறேன். அப்பொழுது நான் உம்மோடு உடன்படிக்கை செய்ய, நீர் விரும்பினபடியே யாவரையும் நீர் அரசாள்வீர்" என்றான். அப்படியே தாவீது அப்நேரை அனுப்பிவிட அவன் சமாதானத்தோடு புறப்பட்டுப் போனான்.
ECTA   பிறகு அப்னேர் தாவீதிடம், "நான் எழுந்து சென்று அனைத்து இஸ்ரயேலையும் அரசரும் என் தலைவருமாகிய உமக்கு முன் ஒன்று திரட்டி வருகிறேன். அவர்கள் உம்மோடு உடன்படிக்கை செய்து கொள்ளட்டும், நீரும் உம் விருப்படி ஆட்சி புரியலாம் என்று கூறினான். தாவீது அப்னேரை வழியனுப்ப அவனும் பாதுகாப்புடன் சென்றான்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us