Bible Versions
Bible Books

Habakkuk 2:16 (GNTWHRP) Westcott-Hort Greek New Testament

Versions

TOV   நீ மகிமையினால் அல்ல, இலச்சையினால் நிரப்பப்படுவாய்; நீயும் குடித்து விருத்தசேதனமில்லாதவன் என்று விளங்கு; கர்த்தருடைய வலதுகையில் இருக்கிற பாத்திரம் உன்னிடத்திற்குத் திரும்பும்; உன் மகிமையின்மேல் இலச்சையான வாந்திபண்ணுவாய்.
IRVTA   நீ மகிமையினால் அல்ல, வெட்கத்தினால் நிரப்பப்படுவாய்; நீயும் குடித்து விருத்தசேதனமில்லாதவன் என்று காட்டிக்கொள்; யெகோவாவுடைய வலதுகையில் இருக்கிற பாத்திரம் உன்னிடத்திற்குத் திரும்பும்; உன் மகிமையின்மேல் வெட்கமான வாந்திபண்ணுவாய்.
ERVTA   "ஆனால், அந்த மனிதன் கர்த்தருடைய கோபத்தை அறிவான். அக்கோபமானது கர்த்தருடைய வலதுகையில் உள்ள விஷம் நிறைந்த கிண்ணத்தைப் போன்றது. அம்மனிதன் அக்கோபத்தைச் சுவைப்பான். அவன் குடிக்காரனைப்போன்று கீழே தரையில் விழுவான். "தீமையான அரசனே, நீ அக் கிண்ணத்திலிருந்து குடிப்பாய். நீ மகிமையை அல்ல அவமானத்தைப் பெறுவாய்.
RCTA   மகிமையால் நிரப்பப்படாமல் நீ நிந்தையால் தான் நிரப்பப்படுவாய். நீயும் குடி, குடி வெறியில் தள்ளாடு; ஆண்டவரின் வலக்கையிலுள்ள கிண்ணம் உன்னிடம் வரும், அப்போது மானக்கேடு உன் மகிமையை மூடி மறைக்கும்.
ECTA   நீ மேன்மை அடையாது ஏளனத்துக்கு ஆளாக்கப்பட்டிருப்பாய்; நீயும் குடி, குடித்துவிட்டுத் தள்ளாடு; ஆண்டவரின் வலக்கையிலுள்ள தண்டனைக்கலம் உன்னிடம் திரும்பி வரும்; அப்போது உன் மேன்மை மானக்கேடாய் மற்றும்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us