Versions
TOV சத்தியம் தள்ளுபடியாயிற்று; பொல்லாப்பை விட்டு விலகுகிறவன் கொள்ளையாகிறான்; இதைக் கர்த்தர் பார்த்து நியாயமில்லையென்று விசனமுள்ளவரானார்.
IRVTA சத்தியம் தள்ளுபடியானது; பொல்லாப்பை விட்டு விலகுகிறவன் கொள்ளையாகிறான்; இதைக் யெகோவா பார்த்து நியாயமில்லையென்று விசனமுள்ளவரானார்.
ERVTA உண்மை போய்விட்டது. நன்மை செய்யவேண்டும் என்று முயற்சி செய்கிறவர்கள் கொள்ளையடிக்கப்படுகிறார்கள். கர்த்தர் பார்த்தார். அவரால் எந்த நன்மையும் கண்டுகொள்ள முடியவில்லை. கர்த்தர் இதனை விரும்பவில்லை.
RCTA வாய்மை மறக்கப்பட்டு விட்டது, தீமையை விட்டு விலகினவன் கொடியவர்க்கு இரையானான்; உலகில் நீதியில்லாததை ஆண்டவர் கண்டார், அவர் கண்களில் கோபத் தீ மூண்டது.
ECTA உண்மை என்பதே இல்லாமல் போய்விட்டது; தீமையினின்று விலகியவர் சூறையாடப்படுகின்றார்; ஆண்டவர் அதைக் கண்டார்; அவர் பார்வையில் நீதியின்மை தீயதாய்ப் பட்டது.