Versions
TOV உங்களுக்கு நம்பிக்கையின் பூரணநிச்சயமுண்டாகும்படி நீங்கள்யாவரும் முடிவுபரியந்தம் அப்படியே ஜாக்கிரதையைக் காண்பிக்கவேண்டுமென்று ஆசையாயிருக்கிறோம்.
IRVTA உங்களுக்கு நம்பிக்கையின் பூரணநிச்சயம் உண்டாக நீங்கள் எல்லோரும் முடிவுவரைக்கும் அதிக கவனத்தைக் காண்பிக்கவேண்டும் என்று ஆசையாக இருக்கிறோம். PS
ERVTA நீங்கள் சோம்பேறியாவதை நாங்கள் விரும்பவில்லை. தேவனால் வாக்குறுதி அளிக்கப்பட்டதைப் பெறப்போகிற மக்களைப் போன்று நீங்கள் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். அவர்களிடம் பொறுமையும் விடாமுயற்சியும் இருப்பதால் அவர்கள் தேவனுடைய வாக்குறுதியைப் பெறுவார்கள்.
RCTA நீங்கள் சோம்பலுக்கு இடம் தராமல் விசுவாசத்தினாலும் பொறுமையினாலும் வாக்குறுதிகளை உரிமையாக்கிக் கொண்டவர்களைப் பின்பற்ற வேண்டும்.
ECTA இவ்வாறு நீங்கள், தளர்ச்சிக்கு இடம் கொடாமல், நம்பிக்கையாலும் பொறுமையாலும் இறைவாக்குறுதிகளை உரிமைப்பேறாகப் பெற்றவர்களைப் போல் வாழுங்கள்.