Bible Versions
Bible Books

Joshua 3:4 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   உங்களுக்கும் அதற்கும் இடையிலே இரண்டாயிரம் முழத் தூரமான இடம் இருக்கவேண்டும்; நீங்கள் நடக்கவேண்டிய வழியை அறியும்படிக்கு, அதற்குச் சமீபமாய் வராதிருப்பீர்களாக; இதற்கு முன்னே நீங்கள் ஒருபோதும் இந்த வழியாய் நடந்துபோகவில்லை என்று சொல்லி கட்டளையிட்டார்கள்.
IRVTA   உங்களுக்கும் அதற்கும் 3,000 அடிகள் தூரம் இடைவெளி இருக்கவேண்டும்; நீங்கள் நடக்கவேண்டிய வழியை அறியும்படி, அதற்கு அருகில் வராமலிருப்பீர்களாக; இதற்கு முன்னே நீங்கள் ஒருபோதும் இந்த வழியாக நடந்துபோகவில்லை என்று சொல்லி கட்டளையிட்டார்கள்.
ERVTA   ஆனால் மிகவும் நெருங்கிச் செல்லாதீர்கள். 2,000 முழ தூரத்தில் அவர்களைப் பின் தொடர்ந்து செல்லுங்கள். நீங்கள் இதற்கு முன் ஒருபோதும் இவ்வழியாக வந்த தில்லை. ஆனால் அவர்களைப் பின் தொடர்ந்தால், எங்கு செல்வதென்பதை அறிவீர்கள்" என்று ஆணைகள் கொடுத்தார்கள்.
RCTA   உங்களுக்கும் உடன் படிக்கைப் பெட்டிக்கும் இடையிலே ஈராயிர முழ தூரம் இருக்கட்டும். அப்பொழுது தான், நீங்கள் அதிக தூரம் பார்க்கவும், நீங்கள் செல்லவேண்டிய வழியைக் கண்டறியவும் முடியும். எனெனில், இதற்கு முன் நீங்கள் இவ்வழியே சென்றது கிடையாது. மேலும், நீங்கள் உடன்படிக்கைப் பெட்டியை நெருங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள்" என்றார்கள்.
ECTA   ஆயினும் உங்களுக்கும் அதற்கும் இரண்டாயிரம் அடி இடைவெளி இருக்கட்டும். யாரும் அதன் அருகில் செல்ல வேண்டாம். நீங்கள் செல்லும் வழி உங்களுக்குத் தெரியவேண்டும். ஏனெனில் நீங்கள் அவ்வழியில் இதுவரை சென்றதில்லை. "
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us