Bible Versions
Bible Books

1 Samuel 7:14 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   பெலிஸ்தர் இஸ்ரவேல் கையிலிருந்து பிடித்திருந்த எக்ரோன் துவக்கிக் காத்மட்டுமுள்ள பட்டணங்களும் இஸ்ரவேலுக்குத் திரும்பக் கிடைத்தது; அவைகளையும் அவைகளின் எல்லைகளையும் இஸ்ரவேலர் பெலிஸ்தர் கையில் இராதபடிக்கு, விடுவித்துக்கொண்டார்கள்; இஸ்ரவேலுக்கும் எமோரியருக்கும் சமாதானம் உண்டாயிருந்தது.
IRVTA   பெலிஸ்தர்கள் இஸ்ரவேல் கையிலிருந்து பிடித்திருந்த எக்ரோன் துவங்கிக் காத்வரை உள்ள பட்டணங்களும் இஸ்ரவேலுக்குத் திரும்பக் கிடைத்தது; அவைகளையும் அவைகளின் எல்லைகளையும் இஸ்ரவேலர்கள் பெலிஸ்தர்கள் கையில் இல்லாதபடி, திருப்பிக்கொண்டார்கள்; இஸ்ரவேலுக்கும் எமோரியர்களுக்கும் சமாதானம் உண்டாயிருந்தது.
ERVTA   பெலிஸ்தர் ஏற்கனவே இஸ்ரவேலர்களிடம் இருந்து எக்ரோன் முதல் காத் வரை பல நகரங்களைக்கைப் பற்றி இருந்தனர். அவற்றை இஸ்ரவேலர் திரும்பப் பெற்றனர். அவற்றைச் சுற்றியுள்ள நகரங்களையும் கைப்பற்றிக்கொண்டனர். இஸ்ரவேலர்களுக்கும் எமோரியருக்கும் இடையில் சமாதானம் நிலவியது.
RCTA   பிலிஸ்தியர் இஸ்ராயேல் கையிலிருந்து கெத் முதல் அக்கரோன் வரை கைப்பற்றின நகர்களும் அவற்றின் எல்லைகளும் இஸ்ராயேலுக்குக் கொடுக்கப்பட்டன. பிலிஸ்தியர் கையினின்று சாமுவேல் இஸ்ராயேலை மீட்டார். அமோறையருக்கும் இஸ்ராயேலுக்கும் இடையே அமைதி நிலவி வந்தது.
ECTA   எக்ரோன் முதல் காத்துவரை இஸ்ரயேலிடமிருந்து பெலிஸ்தியர் கைப்பற்றியிருந்த நகர்கள் இஸ்ரயேலுக்கு திரும்பக் கிடைத்தன. பெலிஸ்தியர் கையினின்று இஸ்ரயேல் தங்கள் எல்லைப் பகுதியை மீட்டுக் கொண்டனர். மேலும் இஸ்ரயேருக்கும் எமோரியருக்குமிடையே அமைதி நிலவிற்று.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us