Versions
TOV கழுதையின் தலையீற்றை ஒரு ஆட்டுக்குட்டியால் மீட்டுக்கொள்வாயாக; அதை மீட்டுக்கொள்ளாதிருந்தால் அதின் கழுத்தை முறித்துப்போடு; உன் பிள்ளைகளில் முதற்பேறானவைகளையெல்லாம் மீட்டுக்கொள்ளவேண்டும். வெறுங்கையோடே என் சந்நிதியில் ஒருவனும் வரக்கூடாது.
IRVTA கழுதையின் முதற்பிறப்பை ஒரு ஆட்டுக்குட்டியால் மீட்டுக்கொள்வாயாக; அதை மீட்டுக்கொள்ளாமல் இருந்தால் அதின் கழுத்தை முறித்துப்போடு; உன்னுடைய பிள்ளைகளில் முதலில் பிறந்தவைகளையெல்லாம் மீட்டுக்கொள்ளவேண்டும். வெறுங்கையோடு என்னுடைய சந்நிதியில் ஒருவனும் வரக்கூடாது.
ERVTA கழுதையின் முதல் ஈற்றை நீங்கள் வைத்துக்கொள்ள விரும்பினால் அதை ஒரு ஆட்டுக்குட்டியைக் கொடுத்து திரும்பப் பெறவேண்டும். இவ்வாறு ஆட்டுக்குட்டியைக் கொடுத்து அக்கழுதையை மீட்காவிட்டால் அப்போது அந்தக் கழுதையின் கழுத்தை முறித்துப் போடவேண்டும். உங்கள் முதற்பேறான மகன்கள் அனைவரையும் நீங்கள் என்னிடமிருந்து மீண்டும் வாங்கவேண்டும். காணிக்கையின்றி யாரும் என் முன்னிலையில் வரக்கூடாது.
RCTA கழுதையின் தலையீற்றை ஓர் ஆட்டைக் கொடுத்து மீட்டுக் கொள்வாய். அதன் விலையை முதலாய்க் கொடுக்க உனக்கு வசதி இல்லாது போனால், அது கொல்லப்படும். உன் பிள்ளைகளில் மூத்த மகனை மீட்டுக்கொள்வாய். வெறுங் கையோடு நம்முடைய சந்நிதிக்கு வரக்கூடாது.
ECTA கழுதையின் தலையீற்றுக்கு ஈடாக ஒரு செம்மரிக் குட்டியைக் கொடுத்து அதை மீட்க வேண்டும். அது மீட்கப்படவில்லையெனில் அதன் கழுத்தை முறித்துவிடு. உன் பிள்ளைகளில் ஒவ்வொரு தலைமகனையும் மீட்க வேண்டும. எவருமே என்முன் வெறுங்கையோடு காணப்படல் ஆகாது.