Versions
TOV பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: இந்த வார்த்தைகளை நீ எழுது; இந்த வார்த்தைகளின்படியே உன்னோடும் இஸ்ரவேலோடும் உடன்படிக்கைபண்ணினேன் என்றார்.
IRVTA பின்னும் யெகோவா மோசேயை நோக்கி: “இந்த வார்த்தைகளை நீ எழுது; இந்த வார்த்தைகளின்படி உன்னோடும் இஸ்ரவேலோடும் உடன்படிக்கை செய்தேன்” என்றார்.
ERVTA மீண்டும் கர்த்தர் மோசேயிடம், "நான் உங்களுக்குக் கூறிய எல்லாக் காரியங்களையும் எழுதிக்கொள். உன்னோடும், இஸ்ரவேல் ஜனங்களோடும் நான் செய்த உடன்படிக்கை இதுவேயாகும்" என்றார்.
RCTA மீண்டும் ஆண்டவர் மோயீசனை நோக்கி: எந்த வார்த்தைகளைச் சொல்லி நாம் உன்னோடும் இஸ்ராயேலரோடும் உடன்படிக்கை செய்தோமோ அந்த வார்த்தைகளை நீ உனக்காக எழுதி வைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.
ECTA ஆண்டவர் மோசேயை நோக்கி, "நீ இவ்வார்த்தைகளை எழுதிக் கொள். இவ்வார்த்தைகளின்படி நான் உன்னோடும் இஸ்ரயேலோடும் ஓர் உடன்படிக்கை ஏற்படுத்தியுள்ளேன்" என்றார்.