Bible Versions
Bible Books

Jeremiah 2:7 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   செழிப்பான தேசத்தின் கனியையும் நன்மையையும் சாப்பிடும்படிக்கு நான் உங்களை அவ்விடத்துக்கு அழைத்துக்கொண்டுவந்தேன்; ஆனாலும் நீங்கள் அதற்குள் பிரவேசித்தபோது, என் தேசத்தைத் தீட்டுப்படுத்தி, என் சுதந்தரத்தை அருவருப்பாக்கினீர்கள்.
IRVTA   செழிப்பான தேசத்தின் கனியையும் நன்மையையும் சாப்பிடுவதற்கு நான் உங்களை அவ்விடத்திற்கு அழைத்துக்கொண்டுவந்தேன்; ஆனாலும் நீங்கள் அதற்குள் நுழைந்தபோது, என் தேசத்தைத் தீட்டுப்படுத்தி, என் சுதந்திரத்தை அருவருப்பாக்கினீர்கள்.
ERVTA   கர்த்தர் கூறுகிறார்: "நான் உங்களை நல்ல நாட்டிற்கு கொண்டுவந்தேன், பல நன்மைகள் நிறைந்த ஒரு நாட்டிற்கு கொண்டுவந்தேன். நான் இதனைச் செய்தேன். எனவே நீ அங்கு வளர்ந்த பழங்கள் மற்றும் அறுவடைகளை உண்ணமுடியும், ஆனால் நீங்கள் என் நாட்டை ‘அசுத்தம்’ மட்டுமே செய்தீர்கள். நான் அந்த நல்ல நாட்டை உங்களுக்குக் கொடுத்தேன், ஆனால் நீங்கள் அதனை தீய இடமாகச் செய்தீர்கள்.
RCTA   செழிப்பான நாட்டுக்கு உங்களைக் கூட்டி வந்தோம்; நீங்கள் உண்டு இன்பமுறக் கூட்டி வந்தோம். ஆனால், நீங்கள் அங்கே போய்ச் சேர்ந்ததும் நமது நாட்டைத் தீட்டுப்படுத்தினீர்கள்; நமது உரிமைச் சொத்தை அருவருப்பாக்கினீர்கள்.
ECTA   செழிப்பான நாட்டுக்கு அதன் கனிகளையும் நலன்களையும் நுகருமாறு நான் உங்களை அழைத்து வந்தேன். நீங்களோ, அந்நாட்டிற்குள் வந்து அதனைத் தீட்டுப்படுத்தினீர்கள்; எனது உரிமைச் சொத்தை நீங்கள் அருவருப்புக்குள்ளாக்கினீர்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us