Versions
TOV மெரதாயீம் தேசத்துக்கு விரோதமாகவும் பேகோடு குடிகளுக்கு விரோதமாகவும் நீ போய், அவர்களைத் துரத்தி, யாவையும் பாழாக்கிச் சங்காரம்பண்ணி, நான் உனக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் செய் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
IRVTA மெரதாயீம் தேசத்திற்கு விரோதமாகவும் பேகோடு குடிகளுக்கு விரோதமாகவும் நீ போய், அவர்களைத் துரத்தி, யாவையும் பாழாக்கிச் சங்காரம்செய்து, நான் உனக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் செய் என்று யெகோவா சொல்லுகிறார்.
ERVTA கர்த்தர் கூறுகிறார்: "மெரதாயீம் தேசத்தைத் தாக்கு! பேகோடில் வாழ்கின்ற ஜனங்களைத் தாக்கு! அவர்களைத் தாக்கு! அவர்களைக் கொல்! அவர்களை முழுமையாக அழி! நான் உனக்குக் கட்டளையிட்ட அனைத்தையும் செய்.
RCTA மெராத்தாயீம் நாட்டுக்கு எதிராகப் புறப்படு, பெக்கோது குடிகளுக்கு எதிராகப் போருக்கெழு; அவர்களை வெட்டி வீழ்த்து, முற்றிலும் அழித்துவிடு, நாம் உனக்குச் சொல்வதெல்லாம் செய், என்கிறார் ஆண்டவர்.
ECTA மெரத்தாயிம் நாட்டுக்கு எதிராகப் புறப்படு; பெக்கோதின் குடிகளை எதிர்த்துமுன்னேறு; அவர்களை வெட்டி வீழ்த்து; முற்றிலும் அழித்துப்போடு; நான் கட்டளையிட்ட அனைத்தையும் நிறைவேற்று, என்கிறார் ஆண்டவர்.