Bible Versions
Bible Books

Zechariah 8:17 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   ஒருவனும் பிறனுக்கு விரோதமாய்த் தன் இருதயத்தில் தீங்கு நினையாமலும், பொய்யாணையின்மேல் பிரியப்படாமலும் இருங்கள்; இவைகளெல்லாம் நான் வெறுக்கிற காரியங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
IRVTA   ஒருவனும் பிறனுக்கு விரோதமாகத் தன் இருதயத்தில் தீங்கு நினைக்காமலும், பொய் சத்தியத்தின்மேல் பிரியப்படாமலும் இருங்கள்; இவைகளெல்லாம் நான் வெறுக்கிற காரியங்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.
ERVTA   உனது அயலார்களைத் துன்புறுத்த ரகசியத் திட்டங்களைப் போடவேண்டாம். பொய்யான வாக்குறுதிகளை செய்யவேண்டாம். நீங்கள் அவற்றைச் செய்து மகிழ்ச்சி அடையக்கூடாது. ஏனென்றால், நான் அவற்றை வெறுக்கிறேன்" கர்த்தர் இவற்றைக் கூறினார்.
RCTA   ஒருவருக்கொருவர் தீங்கு செய்ய உங்கள் உள்ளத்தில் திட்டம் போடாதீர்கள், பொய்யாணை செய்ய விரும்பாதீர்கள்; ஏனெனில் இவற்றையெல்லாம் நாம் வெறுக்கிறோம், என்கிறார் ஆண்டவர்."
ECTA   ஒருவருக்கு எதிராக மற்றொருவர் தீமை செய்ய மனத்தாலும் நினைக்க வேண்டாம்; பொய்யாணை இடுவதை விரும்பாதீர்கள்; ஏனெனில், இவற்றையெல்லாம் நான் வெறுக்கிறேன், "என்கிறார் ஆண்டவர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us