Versions
TOV ஆதலால் நீங்கள் எனக்குச் செவிகொடுத்து, நீங்கள் உங்கள் சகோதரரிடத்தில் சிறைபிடித்துக்கொண்டுவந்தவர்களைத் திரும்ப அனுப்பிவிடுங்கள்; கர்த்தருடைய உக்கிரமான கோபம் உங்கள்மேல் இருக்கிறது என்றான்.
IRVTA ஆதலால் நீங்கள் எனக்கு செவிகொடுத்து, நீங்கள் உங்கள் சகோதரர்களிடத்தில் சிறைபிடித்துக் கொண்டுவந்தவர்களைத் திரும்ப அனுப்பிவிடுங்கள்; யெகோவாவுடைய கடுங்கோபம் உங்கள்மேல் இருக்கிறது என்றான்.
ERVTA இப்போது நான் சொல்வதைக் கவனியுங்கள். நீங்கள் கைப்பற்றிய உங்கள் சகோதர சகோதரிகளைத் திருப்பி அனுப்புங்கள். கர்த்தருடைய கடுமையான கோபம் உங்கள் மீது உள்ளது. எனவே நான் சொன்னபடி செய்யுங்கள்" என்று சொன்னான்.
RCTA ஆதலால் என் வார்த்தையைக் கேளுங்கள். நீங்கள் சிறைப்படுத்தியுள்ள உங்கள் சகோதரர்களைத் தங்கள் நாட்டுக்குத் திரும்பிப் போகும்படி அனுப்பி விடுங்கள். இல்லாவிட்டால் ஆண்டவரின் கடும் கோபம் உங்கள்மேல் விழும்" என்றார்.
ECTA ஆதலால், இப்பொழுது எனக்குச் செவிகொடுங்கள், ஆண்டவரின் கோபக்கனல் உங்கள்மேலும் இருப்பதால், உங்கள் சகோதரரிடமிருந்து நீங்கள் சிறைப்பிடித்து வந்தோரைத் திரும்ப அனுப்பிவிடுங்கள்" என்றார்.