Versions
TOV கர்த்தரின் சந்நிதியில் இருந்த வெண்கலப் பலிபீடத்தை அவன் தன் பலிபீடத்திற்கும் கர்த்தரின் ஆலயத்திற்கும் நடுவே ஆலயத்தின் முகப்பிலிருந்து எடுத்து, அதைத் தன் பலிபீடத்திற்கு வடபுறமாய் வைத்தான்.
IRVTA யெகோவாவின் சந்நிதியிலிருந்த வெண்கலப் பலிபீடத்தை அவன் தன் பலிபீடத்திற்கும் யெகோவாவின் ஆலயத்திற்கும் நடுவே ஆலயத்தின் முன்புறத்திலிருந்து எடுத்து, அதைத் தன் பலிபீடத்திற்கு வடபுறமாக வைத்தான்.
ERVTA கர்த்தருடைய முன்னிலையில் ஆலயத்தின் முன்னாலிருந்த வெண்கலப் பலி பீடத்தை ஆகாஸ் பெயர்த்தெடுத்தான். அந்த வெண்கலப் பலிபீடம் ஆகாஸின் பலிபீடத்திற்கும் கர்த்தருடைய ஆலயத்திற்கும் இடையில் இருந்தது. அந்த வெண்கலப் பலிபீடத்தைத் தனது பலிபீடத்திற்கு வடக்குப் பக்கத்தில் வைத்தான்.
RCTA அன்றியும் அவன் ஆண்டவர் திருமுன் இருந்த பித்தளைப் பலி பீடத்தை அங்கிருந்து அகற்றி ஆலயத்தின் முன்னிருந்தும், அதற்குக் குறிக்கப்பட்டிருந்த நடுப்பீடத்திலிருந்தும் எடுத்து வந்து அதனைத் தன் பலிபீடத்தின் அருகில் வடப்புறமாய் வைத்தான்.
ECTA மேலும், அவன் ஆண்டவர் திருமுன் இருந்த வெண்கலப் பலிபீடத்தைக் கோவிலின் முன்புறமிருந்து அகற்றித் தன் பலிபீடத்திற்கும் ஆண்டவரின் இல்லத்திற்கும் இடையே வடபுறத்தில் வைத்தான்.