Versions
TOV கொப்புகளை விடுகிறதற்கும், கனியைத் தருகிறதற்கும், மகிமையான திராட்சச்செடியாகிறதற்கும், இது மிகுந்த தண்ணீர்களின் ஓரமாகிய நல்ல நிலத்தில் நடப்பட்டிருந்தது.
IRVTA கிளைகளை விடுகிறதற்கும், பழத்தைத்தருகிறதற்கும், மகிமையான திராட்சைச்செடியாகிறதற்கும், இது மிகுந்த தண்ணீர்களின் ஓரமாகிய நல்ல நிலத்தில் நடப்பட்டிருந்தது.
ERVTA திராட்சைக் கொடியானது நல்ல நிலத்தில் நடப்பட்டிருந்தது. ஏராளமான தண்ணீரின் அருகில் இது நடப்பட்டிருந்தது. அதில் கிளைகளும் பழங்களும் வளர்ந்திருந்தன. அது நல்ல திராட்சைக் கொடியாக இருந்திருக்கலாம்."
RCTA கிளைகளை விட்டு, கனிகளைக் கொடுக்கும் சிறந்த ஒரு திராட்சைச் செடியாய் இருக்கும் பொருட்டு, அது முன்னிருந்த இடத்திலிருந்து பிடுங்கித் தண்ணீர் நிரம்ப உள்ள இடத்தில் நடப்பட்டது.
ECTA கிளைபரப்பிக் கனிகொடுக்கும் சிறந்த ஒரு திராட்சைக் கொடியாய் விளங்கும் பொருட்டன்றோ செழிப்பு நிலத்தில் இது நடப்பட்டது!