Bible Versions
Bible Books

Haggai 2:22 (LXXRP) Septugine Greek Old Testament with Grammar and Strong Code

Versions

TOV   ராஜ்யங்களின் சிங்காசனத்தைக் கவிழ்த்து, ஜாதிகளுடைய ராஜ்யங்களின் பெலத்தை அழித்து, இரதத்தையும் அதில் ஏறியிருக்கிறவர்களையும் கவிழ்த்துப்போடுவேன்; குதிரைகளோடே அவைகளின்மேல் ஏறியிருப்பவர்களும் அவரவர் தங்கள் தங்கள் சகோதரனின் பட்டயத்தினாலே விழுவார்கள்.
IRVTA   இராஜ்யங்களின் சிங்காசனத்தைக் கவிழ்த்து, தேசங்களுடைய ராஜ்யங்களின் பெலத்தை அழித்து, இரதத்தையும் அதில் ஏறியிருக்கிறவர்களையும் கவிழ்த்துப்போடுவேன்; குதிரைகளோடே அவைகளின்மேல் ஏறியிருப்பவர்களும் அவரவர் தங்கள் தங்கள் சகோதரனின் பட்டயத்தினாலே விழுவார்கள்.
ERVTA   நான் பல அரசர்களையும் அரசுகளையும் தூக்கி எறிவேன். இவ்வரசுகளின் வலிமையை நான் அழித்துப்போடுவேன். நான் இரதங்களையும், அதில் பயணம் செய்வோரையும் அழித்துப்போடுவேன். அந்தப் படை வீரர்கள் இப்பொழுது நண்பர்களாய் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் வரும் நாட்களில் எதிரிகளாக வாளினால் ஒருவரையொருவர் கொன்றுப் போடுவார்கள்.
RCTA   (21) அரசுகளின் அரியணையைக் கவிழ்க்கப் போகிறோம். புறவினத்தாருடைய அரசுகளின் ஆற்றலை அழிக்கப்போகிறோம்; தேர்களையும், அவற்றில் ஏறிப்போகிறவர்களையும் வீழ்த்துவோம்; குதிரைகளும், அவற்றில் ஏறிச்செல்பவர்களும் ஒருவர் ஒருவரால் வெட்டி வீழ்த்தப்படுவர்.
ECTA   அரசுகளின் அரியணையைக் கவிழ்க்கப்போகிறேன்; வேற்றினத்து அரசுகளின் வலிமையை ஒழிப்பேன்; தேர்களையும் அவற்றில் இருப்போரையும் வீழ்த்துவேன்; குதிரைகளும் குதிரை வீரர்களும் ஒருவர் மற்றவரது வாளுக்கு இரையாவர்.'
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us